Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் இப்போது வெடித்துள்ள மோதல் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சரி செய்ய மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சில முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

எல்பிஜி சப்ளை பற்றாக்குறை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. இதற்கிடையே கேஸ் சிலிண்டர்களை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்படுவதைத் தடுக்க குழாய் வழி இயற்கை எரிவாயு கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சியையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

LPG Crisis Concerning Centre Pushes PNG Pipelines Urges Households Judicious Use Amid Shortages

சிக்கனம்

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா சில முக்கிய கருத்துகளை அவர் தெரிவித்தார். அதாவது தற்போது வரை வீட்டுப் பயன்பாடு குழாய் பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி சப்ளையில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றும் அங்கு முழு விநியோகம் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் மட்டுமே பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும் அதுவும் கூட இப்போது பகுதியளவு சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் வணிக பயன்பாட்டிற்கு எல்பிஜி பயன்படுத்துவோர் குழாய் வழி PNGக்கு மாறுவதே சரியானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிஎன்ஜி

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக வணிகப் பயன்பாடு கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளன. இதனால் ஹோட்டல்கள், உணவகங்கள் போன்ற வணிக நிறுவனங்கள் PNGக்கு மாறுவது, வீடுகளுக்கான கேஸ் விநியோகத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க உதவும் என அவர் கூறியுள்ளார்..

மத்திய அரசு

நகர்ப்புறங்களில் PNG பயன்பாட்டை அதிகரிக்க அரசு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. பிஎன்ஜி கனெக்ஷன் வாங்கும் செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மெயில், அல்லது கேஸ் ஏஜென்சிக்கு போன் செய்து கேட்டாலே போதும் பிஎன்ஜி சப்ளை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது நீங்கள் இருக்கும் பகுதியில் PNGக்கான சாத்தியக்கூறு இருந்தால் உடனடியாக சப்ளை வழங்கப்படும். இதற்கான மானியங்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெட்டர் எழுதிய மத்திய அரசு

இது தொடர்பாகக் கடந்த மார்ச் 16ம் தேதி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நிலுவையிலுள்ள குழாய் பதிக்கும் விண்ணப்பங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்றும், புதிய திட்டங்களுக்கு 24 மணிநேரத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் விதிக்கும் சாலை மீட்டெடுப்பு மற்றும் அனுமதி கட்டணங்களைத் தள்ளுபடி செய்யவும் மாநிலங்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும், குழாய் பதிக்கும் பணிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கவும், ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினைக்குப் பிரதான காரணமாக இருந்தது. இப்போது இந்த ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் வர அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் கேஸ் மற்றும் கச்சா எண்ணெய் வரும் கப்பல்களுக்குப் பிரச்சினை இருக்காது. இதனால் நிலைமை மெல்லச் சீராகும் எனத் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+