Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேஸ் சிலிண்டர் வேணுமா? மத்திய அரசின் இலவச சமையல் சிலிண்டரை பெறுவது எப்படி? கேஸை மிச்சப்படுத்த டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச கேஸ் சிலிண்டரை எப்படி விண்ணப்பித்து, பெற வேண்டும் தெரியுமா? கேஸ் சிலிண்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியுமா?

"பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

யோஜனா: நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும். இந்த கேஸ் இணைப்பு பெற என்ன செய்ய வேண்டும்?

LPG Gas Cylinder apply in pm ujjwala yojana get free connection and LPG Cylinder tips

தேவையான ஆதாரங்கள்:

  • ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை
  • சேமிப்பு கணக்கு பாஸ்புக் அல்லது வங்கி கணக்கு அறிக்கை
  • இருப்பிட சான்று (தொலைபேசி/ மின்சாரம்/ தண்ணீர் அல்லது தொலைபேசி கட்டணம்/வீடு பதிவு ஆவணம்)
  • பிபிஎல் (வறுமைக் கோட்டிற்கு கீழே) ரேஷன் கார்டு
  • பஞ்சாயத்து பிரதானால் அங்கீகரிக்கப்பட்ட பிபிஎல் சான்றிதழ்
  • சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

எப்படி விண்ணப்பிப்பது:

* https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு செல்லவும்.

* அதில் Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்யவும்.

* எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.

* விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்

தகுதிகள்: பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.

விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் BPL தரவுத்தளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்த வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது
சிலிண்டரை எப்படி பயன்படுத்த வேண்டும்:
- கேஸ் சிலிண்டரை எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும். பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும்.

- ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் ரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவிட்டு, அதற்கு பிறகு வால்வை மூடுவது நல்லது.

- அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.. ஏதாவது பழுது என்றால் நாமே அதை சரிசெய்ய முயல கூடாது.. கேஸ் உபகரணங்களை பழுது பார்க்க வேறு யாரையும் அனுமதிக்கவும் கூடாது.

- விற்பனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும். முக்கியமாக மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அனைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் எதுவும் இயங்க கூடாது.

- கேஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும்.

- எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து கேஸ் கசிவை தடுக்கும்.

LPG Gas Cylinder apply in pm ujjwala yojana get free connection and LPG Cylinder tips

சில குறிப்புகள்: கேஸ் சிலிண்டர் உடனே தீர்த்துவிடாமல், எரிபொருளை எப்படி மிச்சப்படுத்த வேண்டும் தெரியுமா? இதுகுறித்து சில டிப்ஸ்கள் சொல்லப்படுகின்றன. இதை கடைப்பிடித்தாலே, ஒரு மாதத்துக்கு மட்டுமே வரும் கேஸ், 50 நாட்களுக்கு மேல் மிச்சப்படுத்தி பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

பர்னர்: இதற்கு முதலில் பர்னரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. -10 நிமிடம் மண்ணெண்ணெய் அல்லது சலவை சோடா சேர்ந்த வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்து உலர செய்த பிறகே பொருத்த வேண்டும். அழுக்கு, கறைகள் பர்னரில் படிந்திருந்தால், உள்ளே எரிவாயு நிறையவே வீணாகி கொண்டிருக்கும். அதனால், வாரம் ஒரு முறையாவது பர்னரை வினிகர் அல்லது புளி தண்ணீரில் ஊற வைத்து கழுவி காய வைக்க வேண்டும்.

அடுப்பின் மீது பரவலாகவும், அடிப்பகுதி கனமாகவும், தட்டையாகவும் இருக்கும் வகையில் பாத்திரங்களை உபயோகப்படுத்தினால், எரிவாயு பாத்திரங்களில் முழுமையாக பரவும்... குறுகிய பாத்திரங்களை பயன்படுத்தினால், எரிவாயு தேவையில்லாமல் வீணாகும்.. அதேபோல, சமைக்கும் பொருட்களையும் மூடி வைத்து சமைத்தால், சீக்கிரமாக உணவுப்பொருட்கள் வெந்துவிடும்.

ஈரப்பதம்: பருப்பு வகைகளாக இருந்தால், முன்தினம் இரவே, நன்றாக ஊற வைத்து சமைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். அல்லது வாணலியில் ஒரு முறை நன்கு வறுத்து பிறகு ஊற வைத்து சமைத்தால் சீக்கிரம் பருப்புகள் வெந்துவிடும். வாணலை வைக்கும்போதும், ஈரமில்லாமல் துடைத்துவிட்டு உபயோகப்படுத்தலாம்..

ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கும் உணவுகளை உடனே ஸ்டவ்வில் வைத்தால், அது இயல்பு நிலைக்கு வருவதற்கு தாமதமாகும். அதனால், முன்கூட்டியே எடுத்து வைத்துவிட்டு, பிறகு தேவையான நேரத்தில் பயன்படுத்தி கொண்டால் போதும்.. கேஸ் வீணாகாது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+