மே 23... நெருங்கும் உச்சகட்ட கிளைமாக்ஸான 'அரசியலின் ஜீரோ அவர்'.. என்ன செய்வார் ஜனாதிபதி?
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் தொங்கு நாடாளுமன்றத்தைத் உருவாகும் என கணிகத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போகிறார் என்பதை நாடு உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலில் பாஜக பிரசாரம் என்பது மோடி என்கிற ஒற்றை மனிதரை முன்வைத்துதான் மேற்கொள்ளப்பட்டது. மோடியின் திட்டங்கள் வென்றால் அவருக்கு மிகப் பெரிய வெற்றி. அதே நேரத்தில் தோல்வி அடைந்தால் நிச்சயம் மோடிக்குத்தான் அது வீழ்ச்சி.
தற்போதைய சூழலில் மத்தியில் அமையப் போவது கூட்டாட்சியாகத்தான் இருக்கும் என்பதற்கான சமிக்ஞைகள் வெளிப்படுகின்றன. மோடியே மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மிகக் குறைவான வேலைகள்தான் காத்திருக்கும்.

மோடி ஜெயித்தால் உடனே பிரதமர்
மோடி வென்றால் அதிகபட்சமாக தேர்தல் முடிவுகள் வெளியான 4 மணி நேரத்துக்குள் பிரதமர் மோடியை அவரால் பதவியேற்க செய்ய முடியும். ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்.

மே 26-ல் பிரதமர் பதவி ஏற்பு
பொதுவாக தலைமை தேர்தல் ஆணையர் முழுமையான தேர்தல் முடிவுகளை மே 23-ந் தேதி ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிப்பார். மே 26-ந் தேதியன்று புதிய பிரதமர் பதவியேற்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மே 26-ல் தான் பிரதமராக மோடி பதவியேற்றார்,

அரசியல் ஜீரோ அவர்
அதாவது அரசியலின் ஜீரோ அவர் என்பதாக இதுதான் அழைக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் முடிவுகளை வெளியிடும் நேரம் முதல் அடுத்த பிரதமர் பதவி ஏற்கும் வரையிலான காலம்தான் அரசியலில் ஜீரோ அவர். இந்த கால கட்டத்தில் ஜனாதிபதி யாருடனும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கலாம். ஆனால் யாருடைய முடிவுக்கும் அவர் கட்டுப்பட வேன்டியவர் அல்ல.

சங்கர் தயாள் சர்மா நிலை
1996-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த சங்கர்தயாள் சர்மா, தனிப்பெரும் கட்சியாக இருந்த ஒரே காரணத்துக்காக- பெரும்பான்மை இல்லாத போதும் வாஜ்பாயை பிரதமராக பதவி ஏற்க அழைத்தார். ஆனால் அந்த அரசு 13 நாட்கள் மட்டும்தான் நீடித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோல்வியை தழுவியதால் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால் கே.ஆர். நாராயணன் ஜனாதிபதியாக இருந்த போது மிக்த் தெளிவாக ஆட்சி அமைக்கப் போவதற்கு யார் யார் ஆதரவு தருகிறார்கள் என கடிதங்களை வாங்கி வைத்துக்கொண்டுதான் முடிவெடுத்தார். அதேபோல் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்தபோதும் தெளிவான ஒரு முடிவை எடுத்தார்.

ராஜீவ் நிலை
1989-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 197 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் பெரும்பான்மைக்கு போதுமான இடங்கள் இல்லை. அதனால் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும் எதிர்க்கட்சி வரிசையில் அமருவதாகவும் ராஜீவ்காந்தி அறிவித்ததால் தேசிய முன்னணியின் வி.பி.சிங் பிரதமரானார் என்பது வரலாறு. இப்போது தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என்கிற நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை நாடே ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications