புதிய ராணுவ தலைமை தளபதியாக எம்.எம். நரவனே நியமனம்- சென்னை பல்கலை.யில் முதுகலை படித்தவர்!
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ராணுவ தளபதி நரவனே, சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டம் படித்தவர்.
தற்போதைய ராணுவ தலைமை பிபின் ராவத்தின் பதவி காலம் வரும் 31-ந் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து புதிய தளபதியாக எம்.எம். நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நரவனே, தற்போது கிழக்கு பிராந்திய தளபதியாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்படை முடித்தார் நரவனே.
புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர். 1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.

வடகிழக்கு மாற்றும் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2017-ம் ஆண்டு குடியரசு தின ராணுவ அணிவகுப்பின் தளபதியாகவும் பணியாற்றியவர் நரவனே.
கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார். அவரது மனைவி வீணா, 25 ஆண்டுகாலம் ஆசிரியராக பணியாற்றியவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications