அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு.. பக்கத்திலேயே மோடி! போட்டோ பார்த்தீங்களா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி 20 மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த விருந்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இருக்கிறார்.

ஜி 20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

M.K.Stalin met US President Joe Biden who attended the dinner hosted by President in G20

ஜி20 நாடுகளின் 17 வது உச்சி மாநாடு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனோசியா தலைநகர் பாலியில் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். அதில் ஜி 20 நாடுகள் குழுவின் தலைமை பதவி இந்தியாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த குழுவில் இருக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் தலைமை பதவி ஆண்டுதோறும் வழங்கப்படும். தலைமை பதவி ஏற்று இருக்கும் நாட்டில் அந்த ஆண்டுக்கான ஜி 20 மாநாடு நடத்தப்படும். அந்த வகையில் ஜி 20 மாநாடு இந்த ஆண்டு டெல்லியில் தொடங்கி உள்ளது. இதற்கான அனைத்து வகை ஏற்பாடுகளையும் பல மாதங்களாக மத்திய அரசு செய்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஏன்செலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டின் முதல் நாளான நேற்று உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு துாதர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் மாலை 6 மணிக்கு டெல்லிக்கு சென்றடைந்தார். இந்த நிலையில் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை 10:05 மணிக்கு சென்னை திரும்ப இருக்கிறார். இந்த நிலையில் ஜி20 மாநாட்டுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அவருடன் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+