டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

‛‛அம்மா..’’உங்களை பற்றி பாட்டி இந்திரா காந்தி சொன்னது உண்மைதான்.. சோனியாவை நினைத்து உருகிய ராகுல்

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து சோனியா காந்தி விலகிய நிலையில் அவரை பற்றி தனது பாட்டியான மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறிய விஷயத்தை ராகுல் காந்தி உணர்ச்சிப்பூர்வமாகவும், உருக்கமாவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பழம்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சுதந்திர இந்தியாவை அதிக ஆண்டு ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

இருப்பினும் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.

அப்பனே முருகா.. நீதான் காப்பாத்தணும்! பய பக்தியுடன் உண்டியலை திருடிய திருடன்! செருப்பு கூட போடலையாம்அப்பனே முருகா.. நீதான் காப்பாத்தணும்! பய பக்தியுடன் உண்டியலை திருடிய திருடன்! செருப்பு கூட போடலையாம்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17 ல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள் அக்டோபர் 19ல் எண்ணப்பபட்டு முடிவுகள் வெளியாகின.

மல்லிகார்ஜூன கார்கே வெற்றி

மல்லிகார்ஜூன கார்கே வெற்றி

இந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் போட்டியிடவில்லை. இதனால் 24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராகி உள்ளார். நேற்று மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார்.

விலகிய சோனியா காந்தி

விலகிய சோனியா காந்தி

இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பொறுப்பு வகித்த சோனியா காந்தி அந்த பொறுப்பில் இருந்து விலகி கொண்டார். இதன்மூலம் ஏறக்குறைய 20 ஆண்டுகாலம் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் உடல்நலக்குறைவால் அவ்வப்போது சோனியா காந்தி சிரமப்படுவதால் இனி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் செயல்பட வாய்ப்பு இல்லை.

ராஜீவ் காந்தி போட்டோவுடன் சோனியா

ராஜீவ் காந்தி போட்டோவுடன் சோனியா

இதனால் மல்லிகார்ஜூன கார்கேவின் நேற்றைய பதவியேற்பு விழா என்பது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவரான நிலையில் அவர் ராஜீவ் காந்தியின் பிரேம் போட்டோவை சோனியா காந்தியிடம் வழங்கினார். அதனை பெற்று கொண்ட சோனியா காந்தி சிரித்த முகத்துடன் உயர்த்தி காண்பித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி

உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி

இதுஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சிக்காக சோனியா காந்தியின் செயல்பாடு குறித்து அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் உணர்ச்சி வெள்ளத்தில் தங்களின் அம்மா குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் செய்திருந்தனர். இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அம்மா, பாட்டி (இந்திரா காந்தி) ஒருமுறை என்னிடம் சொன்னார்கள். நீங்கள் அவர் வயிற்றில் பிறக்காத மகள் என்று. அது எவ்வளவு சாத்தியமாகி உள்ளது. உங்களின் மகன் என்பதை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன் அம்மா'' என உருக்கமாக குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்த பதிவில் ராகுல் காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியுடன் சோனியா காந்தி இருக்கும் படத்தை பதிவிட்டு இருந்தார்.

பிரியங்கா காந்தி பதிவு

பிரியங்கா காந்தி பதிவு

இதேபோல் பிரியங்கா காந்தியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‛‛உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அம்மா. உலகம் என்ன சொன்னாலும், நினைத்தாலும் நீங்கள் அன்புக்காக அனைத்தையும் செய்தீர்கள் என்பது எனக்கு தெரியும்'' என கூறியுள்ளார். மேலும் அவர் தனது பெற்றோராக ராஜீவ் காந்தி-சோனியா காந்தியின் புகைப்படத்தை பகிர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.

English summary
"Ma, Dadi once told me you were the daughter she never had. How right she was. I'm really proud to be your son," says Rahul Gandhi about his mother Sonia Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X