விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 பரிசு.. மத்திய அரசு திட்டத்தை அமல்படுத்திய ம.பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறுமசாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான உயிர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படாததால் நிகழ்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்ற வேண்டும் என்பதே ரோட்டில் செல்பவர்களின் எண்ணமாக உள்ளது.

ஆனால் போலீசார் விசாரணை, மருத்துவமனை கெடுபிடிகள் என்று பல சிக்கல்கள் இருப்பதால் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

காப்பாற்றுபவர்களுக்கு பரிசு

காப்பாற்றுபவர்களுக்கு பரிசு

விபத்தில் சிக்கியர்களை காப்பாற்றுவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது சாலை விபத்துகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்பவர்களுக்கு ரூபாய் 5000 பரிசு வழங்கப்படும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் உயிரை காப்பாற்றிய மிகவும் தகுதியான பத்து நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேசிய அளவில் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கூறியது.

அற்புதமான திட்டம்

அற்புதமான திட்டம்

மத்திய அரசின் இந்த அற்புதமான திட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. நேற்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது என்று "என்று மாநில போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு கூடுதல் காவல் துறை பொது இயக்குநர் ஜனார்த்தன் தெரிவித்தார். அவசர காலங்களில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும், அப்பாவி உயிர்களை காப்பாற்ற மற்றவர்களை ஊக்குவிப்பதற்கும் இந்த திட்டம் நோக்கமாக உள்ளது என்று அவர் கூறினார்.

தகுதியானவர்கள் யார்?

தகுதியானவர்கள் யார்?

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் மூளை, முதுகுத் தண்டு காயங்கள் ஏற்பட்டால் அல்லது குறைந்தபட்சம் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அல்லது பெரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் அவர்களை கொண்டு வந்து சேர்த்தவர்கள் இந்த திட்டத்தில் பரிசு பெற தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுளள்து.

விவரங்கள் பாதுகாக்கப்படும்

விவரங்கள் பாதுகாக்கப்படும்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும் நபரால் வழங்கப்படும் விவரங்கள் பரிசு தொகைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அவை வேறு எங்கும் பயன்படுத்தப்படாது எனவும் ஒரு நபருக்கு ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஐந்து முறை வழங்கப்படலாம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+