மேகாலயா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக.. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் நியமனம்
சென்னை: மேகாலயா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன். இந்த நிலையில், இன்று இவர் மேகாலயா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதனை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்து இருந்தது.

இதற்கிடையே மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக இருந்து வந்த சஞ்சீவ் பானர்ஜியின் பதவிக்காலம் முடிந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் மேகாலயா மாநில தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் பிறந்தவர் நீதிபதி எஸ். வைத்தியநாதன். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை உயர்நிலை பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், 1979-82ல் அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து அவர் 1982-85 ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் BL, 1986 இல் தனிநபர் மேலாண்மை, தொழிலாளர் நலன் மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுகலை டிப்ளமோ படித்தார். தொடர்ந்து அவர்1986 ஆம் ஆண்டில் வழக்கறிஞராகச் பணியில் சேர்ந்தார்.
இதனை தொடர்ந்து 25.10.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 14.04.2015 அன்று இந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார். இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியா இருந்த டி ராஜா ஓய்வு பெற்றதை அடுத்து, நீதிபதி எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவரால் கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications