கும்பமேளா: 40 பேர் பலியான மரண ஓலத்துக்கு நடுவே ஹெலிகாப்டரில் பூமழை தூவி புனித நீராடிய 'சாது'க்கள்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் தை அமாவாசையை முன்னிட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடிய போது நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரம் நிகழ்ந்துள்ளது. இந்த துயரத்தின் மரண ஓலம் ஓய்வதற்குள்ளாகவே மகா கும்பமேளா நடைபெறும்
திரிவேணி சங்கமத்தில் சாதுக்கள் மற்றும் சங்கராச்சாரியார்கள், ஹெலிகாப்டரில் பூமழை தூவ புனித நீராடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் பக்தர்கள்.
மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட இந்தியாவின் புனித நதிக்கரைகளில் நடைபெறும்; கும்பமேளா என்பது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

தற்போது உ.பி. பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த கும்பமேளா காலங்களில் மட்டுமே வெளியே வரும் சாதுக்களும் பல்லாயிரக்கணக்கில் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தை அமாவாசை நாளான இன்று புனித நீராட வழக்கத்தைவிட பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் ஒன்று திரண்டிருந்தனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடியதால்
ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
#WATCH | #Mahakumbh | Prayagraj: Flower petals showered on saints and seers taking a holy dip at Triveni Sangam on the occasion of Mauni Amavasya. pic.twitter.com/pKZsKA5ahU
— ANI (@ANI) January 29, 2025
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை இழந்த யாத்ரீகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்
கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக நான் முதலமைச்சர் யோகி
ஆதித்யநாத்துடன் பேசியுள்ளேன். நான் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
#WATCH | Prayagraj | Acharya Mahamandaleshwar Swami Avdheshanand Giri Maharaj of Juna Akhara and Yog guru Baba Ramdev offer prayers on Mauni Amavasya at Triveni ghat during ongoing Mahakumbh pic.twitter.com/CyiL0bilA3
— ANI (@ANI) January 29, 2025
இப்படியான பெருந்துயரம் நிகழ்ந்த சில மணிநேரங்களிலேயே தை அமாவாசை நாள் என்பதால் சாதுக்களும் சங்கராச்சாரியார்களும் பெருந்திரளாக ஒன்று திரண்டு புனித நீராடினர். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சாதுக்கள் மீது பூமழை தூவப்பட்டது. எந்த திரிவேணி சங்கமத்தில் மரண ஓலம் அடங்காமல் தொடர்ந்து கொண்டிருந்ததோ அதே திரிவேணி சங்கமத்தில் இப்படி ஹெலிகாப்டரில் பூமழை தூவி சாதுக்கள் மற்றும் சங்கராச்சாரியார்கள் புனித நீராடியது பெரும் அதிர்ச்சி தருகிறது என்கின்றனர் பக்தர்கள்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications