மகாத்மா காந்தியின் பேரன் அருண் மணிலால் காந்தி காலமானார்.. தலைவர்கள் இரங்கல்
டெல்லி: நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மிக முக்கிய தலைவராக இருந்த மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானர். அவருக்கு வயது 89 ஆகும்.
இந்தியாவின் சுந்தர போராட்ட வரலாற்றை எளிதாகக் காந்திக்கு முன்பு மற்றும் காந்திக்குப் பிறகு எனப் பிரிக்கலாம். அவரது வருகைக்குப் பின்னரே சுதந்திரப் போராட்டம் அடுத்த நிலைக்குச் சென்றது.

தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த காந்தி இந்தியா திரும்பிய பிறகு, அவர் அகிம்சை வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். நமது நாடு சுதந்திரம் பெற அவரது போராட்டங்களும் முக்கிய காரணம்.
சுதந்திரப் போராட்டத்தில் காந்தியால் எழுந்த எழுச்சி குறித்து தனியாகச் சொல்லத் தேவையில்லை. நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பின்னால் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் போராட்டத்தை ஒடுக்க எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் கூட காந்தியின் அகிம்சை போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
இப்படி நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட மிக முக்கிய தலைவராக இருந்த மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானர். அவருக்கு வயது 89 ஆகும்.
எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான அவரது இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகலில் கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரது மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

காந்தியின் மகன் மணிலால் காந்தி- சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு 1934 ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தவர் தான் இந்த அருண் காந்தி. இவரும் தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி சமூக ஆர்வலராக்கப் பல விஷயங்களுக்குக் குரல் கொடுத்து வந்தார்.
மேலும், 2017இல் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
அருண் காந்தி இன்று தனது 89 வயதில் உயிரிழந்த நிலையில், இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications