டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடி உரையில் முக்கிய அறிவிப்புகள் இருக்காது?

Google Oneindia Tamil News

டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஆகையால் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் முக்கியமான அறிவிப்புகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என அறிவித்திருக்கிறார். பிரதமர் மோடியின் அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக் சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்

7-வது முறையாக உரை

7-வது முறையாக உரை

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பின்னர் 7-வது முறையாக நாட்டு மக்களிடையே மோடி உரையாற்ற உள்ளார். ஆகையால் மோடியின் உரையில் என்ன மாதிரியான அம்சங்கள் இருக்கும் என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கொள்கை அறிவிப்பு இல்லை?

கொள்கை அறிவிப்பு இல்லை?

தற்போதைய சூழ்நிலையில் கொள்கை ரீதியான எந்த ஒரு புதிய அறிவிப்புக்கும் சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது. தற்போது பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. பிரதமர் மோடி இதனை மீறும் வகையில் அறிவிப்பு எதனையும் வெளியிட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

பண்டிகைகளும் கொரோனாவும்

பண்டிகைகளும் கொரோனாவும்

இருப்பினும் பண்டிகை காலம் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை மோடி வலியுறுத்துவார் என்றே தெரிகிறது. சென்னையிலும் கொல்கத்தாவிலும் கடைகளில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் கூடிய வீடியோக்கள் வெளியாகி இருந்தன. இதனை சுட்டிக்காட்டி மோடியின் உரை இருக்கலாம் என தெரிகிறது.

ராகுல் அட்டாக்

ராகுல் அட்டாக்

ஏற்கனவே மோடியின் உரை தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நிச்சயமாக சீனா பற்றி எல்லாம் எதுவும் சொல்லவே மாட்டார். நமது நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்திருந்தாலும் அதுபற்றி மவுனமாக எதுவும் பேசாமல் இருக்கும் உலகின் ஒரே பிரதமர் மோடிதான் என சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

English summary
Due to the Bihar Assembly elections, a major policy or economic stimulus announcement is improbable in PM Modi's today address to nation. பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. ஆகையால் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையில் முக்கியமான அறிவிப்புகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பின்னர் 7-வது முறையாக நாட்டு மக்களிடையே மோடி உரையாற்ற உள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X