சட்டென ஆஃப் ஆன மைக்.. அவமானப்படுத்திட்டாங்க! ராஜ்யசபாவில் கொதித்த கார்கே! திருச்சி சிவா சப்போர்ட்
டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து நாள் முழுவதும் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டு இருந்தபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கடந்த வாரம் வியாழன் அன்று நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாளிலேயே மணிப்பூர் பெண்கள் நிர்வாண வீடியோ தொடர்பாகவும், அங்கு அரங்கேறும் பழங்குடிகள், பெண்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் கூட்டத் தொடரின் முதல் நாளே நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மறுநாள் வெள்ளிக்கிழமையும் இதேபோன்றுதான் அவை அமளி துமளியுடன் காணப்பட்டது. செய்தியாளர் சந்திப்பில் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய பிரதமர் மோடி மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முன் பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் வெள்ளிக்கிழமையன்றும் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்த நிலையில் வார விடுமுறை முடிந்து கடந்த திங்கள்கிழமை மீண்டும் அவை கூடியது. அப்போதும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மணிப்பூர் தொடர்பாக தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மக்களவையில் அப்போது இருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக் சபாவில் விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால் அவர்களின் கோரிக்கை வேறாக இருந்தது. மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இது பற்றி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து இரவு முழுவதும் சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று காங்கிரஸ் எம்பி ரஜானி பாட்டில் இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நேற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி துமளி தொடர்ந்ததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
'
இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை அளித்தனர். மறுபக்கம் மாநிலங்களவையில் நாள் முழுவதும் மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
சிறிது நேர விவாதத்திற்கு அனுமதி வழங்குவதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்ததை அவர்கள் ஏற்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மாநிலங்களவையில் பேசியபோது அவரது மைக் அணைக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மைக்கை அணைத்து தன்னை அவமானபடுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார்.
திமுக எம்பி திருச்சி சிவாவும் மல்லிகார்ஜுன் கார்கே மைக் அணைக்கப்பட்டதை கண்டித்தார். ஆனால், அவரது மைக் அணைக்கப்படவில்லை என அவைத் தலைவர் தன்கர் விளக்கமளித்தார். இது தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட மறுபக்கம் பாஜக எம்பிக்கள் "மோடி மோடி" என்று கோஷமிட்டனர். இந்த நிலையில் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையும் இதேபோல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications