மோடி சர்கார்..அரசு நிறுவனங்கள் “ஜீரோ” -வேலை “நோ”! இன்னுமா இந்தியா ஜொலிக்குது? காங். தலைவர் கார்கே
டெல்லி: புதிதாத எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்காமல், எந்த பணியிடங்களையும் நிரப்பாமல் இந்தியா ஜொலித்து வருவதாக கூறுகிறார்கள் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து இருக்கிறார்.
கடந்த மாதம் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசி தரூரை வீழ்த்தி மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார்.
தேர்தலில் வென்ற கையோடு கட்சி மறுசீரமைப்பு பணிகள், குஜராத், இமாச்சல பிரதேச மாநில தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கார்கே.

மல்லிகார்ஜுன கார்கே ட்வீட்
இந்த நிலையில் ட்விட்டரில் இன்று மல்லிகார்ஜுன கார்கே மத்திய பாஜக அரசை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், "மோடி சர்க்கார் அரசு நிறுவனங்களை அழித்து இருக்கிறது. ஒரு பொதுத்துறை நிறுவனத்தை கூட உருவாக்கவில்லை. 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி இருக்கிறார்கள்.

இந்தியா ஒளிர்கிறதா?
நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தில் இருந்து 9 லட்சமாக குறைந்து இருக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 2.6 லட்சம் முதல் 5 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. புதிதாக எந்த வேலையும் உருவாக்கப்படவில்லை. எந்த பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. இன்னும் இந்தியா ஜொலிக்கிறதா?" என்று பதிவிட்டு இருக்கிறார்.

ராகுல் காந்தி
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி பதவி விலகினார். அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.

சோனியா காந்தி
இதன் காரணமாக காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காந்தி குடும்பத்தை சாராதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

காங்கிரஸ் தேர்தல்
காந்தி குடும்பத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் ஜி 23 என்ற அதிருப்தி குழுவும் உருவானது. இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த தலைமை முடிவு செய்தது. இதில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. அதே நேரம் காந்தி குடும்பத்தின் ஆதரவாளரான மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் நிறுத்தப்பட்டார்.

வாக்குப்பதிவு
அவரை எதிர்த்து கேரள மாநில காங்கிரஸ் எம்பி சிசி தரூரும் இதில் போட்டியிட்டார். கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்து கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பதவியேற்பு
நடந்து முடிந்த தலைவர் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிக வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மல்லிகார்ஜுன கார்கேவின் பதவியேற்பு விழா இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வழிகாட்டுதல் குழு
பதவியேற்ற நாளிலேயே காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழுவில் 47 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள். மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அமைக்கப்பட்ட இந்த வழிகாட்டுதல் குழுவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்பிக்கள் மாணிக்கம் தாக்கூர், செல்லகுமார் ஆகியோர் இடம்பெற்றனர்.












Click it and Unblock the Notifications