என் குழந்தைகளை காப்பாற்ற.. உண்மைகளை வெளியே கொண்டு வருவேன்! ஆர்த்தி ரவியின் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை
சென்னை: ரவி மோகன்-ஆர்த்தி ரவி குடும்ப விவகாரம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பாடகி கெனிஷா தொடர்பான சர்ச்சை இந்த விவகாரத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. ரவி மோகனுடன் கெனிஷா பல இடங்களில் ஒன்றாக பலம் வந்தார், இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றது போன்றவை சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தை கிளப்பின. இதற்கிடையில் ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த சூழலில் கெனிஷா சில வீடியோக்கள் மூலம் தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளித்திருந்தார். தன்னை குடும்பத்தை கெடுத்தவர் போல சித்தரிக்கிறார்கள் என்றும், ரவி மோகன் ஒரு குழந்தை அல்ல; அவர் தனது முடிவுகளைத் தானே எடுக்கக்கூடியவர் என்றும் கூறியிருந்தார்.

கெனிஷா வருத்தம்
மேலும் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள், 19 வயதிலேயே நடந்த கல்யாணத்தால் பட்ட கஷ்டமும் மற்றும் நான்கு மாத குழந்தை வயிற்றில் இருக்கும் போது கணவர் அடித்து அந்த குழந்தையும் அபார்ஷன் ஆகிவிட்டது என தனிப்பட்ட விஷயங்களையும் வெளிப்படையாக பகிர்ந்திருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பின்னர் அந்த வீடியோக்களையும் கெனிஷா நீக்கி விட்டார்.
இந்த நிலையில் தற்போது ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், "தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை ஒருபோதும் எழுப்பாதீர்கள். அது ஒரு தாய் சிங்கமாக இருந்தால் கடவுள் காப்பாற்றட்டும். நான் கண்ணியமாக அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்கக் கூடாது. அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் கூடாது.
கெனிஷா வெளியிட்ட வீடியோ
என் குழந்தைகளையும் என் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலை வந்தால், என் கம்ஃபர்ட் ஜோனிலிருந்து வெளியே வந்து உண்மையுடன் உலகை எதிர்கொள்வேன். ஏனெனில் இறுதியில் உண்மைதான் வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர், இதுவரை அமைதியாக இருந்த ஆர்த்தி ரவி இனி நேரடியாக பதிலளிக்கத் தயாராக இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். குறிப்பாக "என் குழந்தைகளை காப்பாற்ற" மற்றும் "உண்மையுடன் உலகை எதிர்கொள்வேன்" என்ற வரிகள், அவர் விரைவில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆர்த்தி ரவி போஸ்ட்
இதுவரை நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல் இருந்த ஆர்த்தி ரவி, இந்த ஒரு பதிவின் மூலம் தனது மனநிலையை வெளிப்படுத்தியிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் அவருக்கு ஆதரவாக கருத்துக்கள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் இது கெனிஷா விவகாரத்திற்கான மறைமுக பதிலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் ஏற்கனவே பரபரப்பாக இருந்த இந்த குடும்ப சர்ச்சை இன்னும் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.
அதுபோல கெனிஷாவும் நேற்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் தான் ரவி மோகனை விட்டு பிரியப் போகிறேன் என்பது போல போஸ்ட் போட்டு இருந்தார். நல்ல நண்பர்களாக இருந்தோம் ஆனால் இந்த சமூகமும் சில பெண்களும் எங்களை மோசமாக சித்தரிக்கின்றனர், இதனால் நான் அவரை விட்டு நிரந்தரமாக பிரியப் போகிறேன் இனி இந்த சென்னையில் மட்டும் போகப் போகிறேன் என்பது போல ஒரு பெரிய போஸ்ட் போட்டிருந்தார். அதற்கு பதிலாக ஆர்த்தி ரவி இப்போது இப்படிக்கு பதில் கொடுக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.














Click it and Unblock the Notifications