டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிசிசிஐயில் கங்குலிக்கு “கல்தா”.. அமித்ஷா மகனுக்கு “பவர்” - மோடியிடமே முறையிட்ட மம்தா பானர்ஜி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவருமான சவுரவ் கங்குலியின் தலைவர் பறிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கு பிசிசிஐ தலைவராக கடந்த நவம்பர் மாதம் சவுரவ் கங்குலி பதவியேற்றார். செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய்ஷா பதவியேற்றனர். இவர்களின் பதவிக்காலம் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய இருக்கிறது.

2 வது முறையாக இவர்கள் பதவி வகிக்க வாய்ப்பு இருக்கும் நிலையில் ஜெய்ஷா செயலாளர் பதவியில் தொடர்வார் என்றும், கங்குலி தலைவராக தொடர மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஐசிசியில் கங்குலி வகித்த இந்திய பிரதிநிதிக்கான பொறுப்பும் ஜெய்ஷாவிடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தாமரை” குளமான இந்திய கிரிக்கெட்.. பிசிசிஐ, ஐபிஎலில் பாஜகவின்“தாமரை” குளமான இந்திய கிரிக்கெட்.. பிசிசிஐ, ஐபிஎலில் பாஜகவின்

 பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

சவுரவ் கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவியை வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று மும்பையிலும் கடந்த வாரம் டெல்லியிலும் அவர் ஆலோசித்து இருக்கிறார். எந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

ஐபிஎல் தலைவர்

ஐபிஎல் தலைவர்

பிரிஜேஷ் பட்டேல் வகித்து வரும் ஐபிஎல் தலைவர் பதவியை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சகோதரரும் பிசிசிஐ பொருளாளருமான அருண் சிங் தூமலுக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அனுராக் தாக்கூர் இதற்கு முன் பிசிசிஐ தலைவராக பதவி வகித்தவர்.

பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜீவ் சுக்லாவே தொடர்வார் என்று கூறப்படுகிறது. கங்குலி வகித்து வந்த பிசிசிஐ தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னியை நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் பந்துவீச்சாளராக இடம்பெற்றவர் ரோஜர் பின்னி.

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி

திரிணாமூல் காங்கிரஸ் எம்பி

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல்-இல் பாஜகவின் வாரிசு அரசியல் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் குற்றம்சாட்டி இருந்தார். ஒது குறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "நான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா. என் தந்தை அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர். நான் ஐபிஎல் புதிய தலைவர் அருண் சிங் தூமல். என் அண்ணன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்." என்று குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவி சவுரவ் கங்குலியிடம் இருந்து பறிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஐசிசி தலைவர் தேர்தலில் சவுரவ் கங்குலி போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

English summary
West Bengal Chief Minister Mamata Banerjee told Prime Minister Narendra Modi that former captain of the Indian cricket team and a native of West Bengal, Sourav Ganguly, has been deprived of his leadership in BCCI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X