உவ்வே! இங்கே பாருங்க டீ கேனை ரயிலின் டாய்லட் தண்ணீரில் கழுவிய நபர்.. கொந்தளித்த நெட்டிசன்ஸ்
டெல்லி: ரயிலின் கழிவறைக்குள் வைத்து, டீ அடைத்து வைக்கப்படும் கேனை ஒருவர் சுத்தம் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கடந்த சில நாட்களாக பரவி வரும் இந்த வீடியோ காட்சிகள், ரயில் நிலையத்தில் விற்பனை செய்யப்படும் டீ, காபி உள்ளிட்ட உணவுப்பொருட்களின் தரம், தூய்மை உள்ளிட்டவற்றை கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது.
ரயில்களில் தொலை தூர பயணங்கள் செல்லும் பயணிகள் பலரும் ரயில் நிலையத்தில் வியாபாரிகள் கொண்டு வரும் டீ யை வாங்கி குடிப்பதை பார்த்து இருக்கலாம். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை என எங்கு சென்றாலும் நள்ளிரவில் கூட ரயில் நிலையத்தில் டீ விற்பவர்கள், டீ, காபியை விற்பனை செய்வதை பார்க்க முடியும். ரயில் நின்று செல்லும் சில நிமிடங்களுக்குள் பரபரவென டீயை விற்றுவிட்டு சென்று விடுவார்கள்.

ரயில்களில் டீ விற்பனை
பயணக்களைப்பில் இருக்கும் பயணிகளும், டீயை வாங்கி அருந்தி புத்துணர்சி அடைந்து கொள்வார்கள். அதே நேரத்தில் ரயிலில் கொண்டு வரப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகிறது. அதிக தொகைக்கு விற்பனை செய்வது, காலாவதியான உணவு பொருளை விற்பது. சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு போன்ற புகார்கள் அவ்வப்பொது பயணிகள் வைப்பது உண்டு.
டாய்லெட்டில் வைத்து
ஆனால் இது குறித்து புகாரளித்தாலும் கூட உரிய முறையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பயணிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இந்த வீடியோவில், டீ அடைத்து கொண்டு செல்லப்படும் கேன் ஒன்றை, வியாபாரம் முடிந்த பிறகு வியாபாரி, ரயிலின் டாய்லட்டில் உள்ள ஜெட் ஸ்பிரேவில் உள்ள தண்ணீரை பீய்ச்சி அடித்து கழுவுகிறார்.
ஆயூப் என்ற விளாகர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரயிலுக்குள் டீ கேனை கழுவும் சம்பவம் எங்கு நடைபெற்றது, எப்போது நடைபெற்றது என்ற தகவலை உறுதி செய்ய முடியவில்லை. எனினும், இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆவேசத்துடன் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆவேசத்துடன் பதிவிடும் நெட்டிசன்ஸ்
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "ஒரு நபரால் எப்படி இவ்வளவு மோசமாக செயல்பட முடியும். இதை பார்க்கும் போதே கோபம் தான் வருகிறது என பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், ”இதை ஜீரணிக்கவே முடியவில்லை. ரயிலில் இனி டீ குடிக்க தோன்றுமா? என பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசனோ, நான் பொதுவாக ரயிலில் டீ குடிப்பது இல்லை. இனி தொடவே மாட்டேன். இத்தகைய செயல்களை தடுக்க ரயில்வே போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
ரூ.1 லட்சம் அபராதம்
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை - ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் டாய்லட் தண்ணீரில், டீ தயாரிக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பந்தபட்ட நபருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications