ச்சே மாணவரா? விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தது யார்? அடையாளத்தை வெளியிட்ட டெல்லி போலீஸ்
டெல்லி: அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது போதையில் சிறுநீர் கழித்தவரின் அடையாளத்தை டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதில், சிறுநீர் கழித்த நபர் அமெரிக்காவில் படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, அந்த மாணவருக்கு தங்கள் விமானத்தில் பறக்க சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும், இந்திய விமானப் போக்குவர்தது இயக்குநரகமும் அந்த மாணவர் மீது எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.

அலறிய பயணி
அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானம் நியூயார்க் நகரில் இருந்து புறப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி வந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணித்த ஒரு பயணி விடிய விடிய மது அருந்திக் கொண்டும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தேவையில்லாமல் பேசிக்கொண்டும் வந்துள்ளார். இதுதொடர்பாக சக பயணிகள் புகார் அளிக்கவே, விமான ஊழியர்கள் அவரை எச்சரித்தனர். இதனால் சிறிது நேரம் அவர் அமைதியாக வந்தார். இந்நிலையில், விமானத்தில் திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது.

சாகவாசமாக சிறுநீர் கழித்த இளைஞர்
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகளும், விமான ஊழியர்களும் அங்கு வந்தனர். அப்போது அந்த போதை ஆசாமி தனக்கு அருகே அமர்ந்திருந்த சக ஆண் பயணி மீது சிறுநீர் கழித்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விமான ஊழியர்கள் விசாரணை நடத்தினர். இதில், தான் தூங்கிக் கொண்டிருந்த போது சிறுநீர் கழித்துவிட்டதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் அவர் கேட்டுள்ளார். பின்னர், பாதிக்கப்பட்ட பயணியும் அவர் மீது புகார் அளிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார். எனினும், சனிக்கிழமை டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் வந்ததும், ஊழியர்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்திய மாணவர்
இந்நிலையில், அந்த நபரின் விவரத்தை டெல்லி போலீஸார் தற்போது வெளியிட்டுள்ளனர். அவரது பெயர் ஆர்யா வோஹ்ரா (21). இவர் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். டெல்லியில் உள்ள ராணுவக் குடியிருப்பில் இவர் தங்கியுள்ளார். இப்போதைக்கு இந்த விவரங்களை மட்டுமே டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வாழ்நாள் தடை
இந்த சூழலில், சம்பந்தப்பட்ட மாணவர் தங்கள் விமானங்களில் பயணிப்பதற்கு 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' விமானம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரி ஒருவர் கூறுகையில், "சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் இந்த சம்பவத்தை சரியாக கையாண்டுள்ளது. இச்சம்பவத்தின் முழு விவரங்களையும் அந்த விமான நிறுவனத்திடம் கேட்டிருக்கிறோம். அந்த அறிக்கையை ஆராய்ந்த பிறகு, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
-
திணறும் அமெரிக்கா - இஸ்ரேல்.. ஈரான் உச்ச தலைவர் கமேனியை காக்கும்.கருப்பு படை.. களமிறங்கிய NOPO -
ஈராக்கில் விழுந்து வெடித்த அமெரிக்க விமானம்.. வேலையை காட்டிய ஈரான்! என்ன நடக்குது? -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
எங்களின் இறை தூதுவர் வருகிறார்.. ஓப்பனாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. ஓ இதுக்குத்தான் அட்டாக்கா! -
ஈரான் எழுந்திருக்கவே முடியாது.. இதயத்தில் இடி இறக்கிய இஸ்ரேல்! தன் பங்குக்கு போட்டு தாக்கும் டிரம்ப் -
ஈரானின் எரிபொருள் இதயத்திலேயே கை வைத்த டிரம்ப்.. கார்க் தீவிலேய களம் இறங்கிய அமெரிக்கா -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
ஈரான் போரால் அமெரிக்காவிற்கு என்ன லாபம்.. டிரம்ப்பின் நிஜமான நோக்கம் என்ன.. முழு பின்னணி -
ஈரான் - அமெரிக்கா போர்.. நீங்கள் சாப்பிடும் மீன் உணவுகளை பாதிக்க போகுது! எப்படி தெரியுமா? -
92,00,00,000 ரூபாய் பரிசு.. கமேனி மகன் தலைக்கு விலை வைத்த அமெரிக்கா! கண் சிவந்த நெதன்யாகு! பரபர! -
ஈரான் போரில் வீழ்ந்த 4-வது அமெரிக்க விமானம்.. ஈராக்கில் அமெரிக்க விமானம் விபத்தில் சிக்கியது எப்படி? -
எரிபொருளுக்கு தனி கட்டணம்! விமான பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இண்டிகோ நிறுவனம்!












Click it and Unblock the Notifications