Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகிலேயே மிக நீளமான...மணாலி - லே சுரங்கப்பாதை ... நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகிலேயே மிகவும் நீளமான 9 கிலோ மீட்டர் தொலைவிலான மணாலி - லே சுரங்கப் பாதை பணிகள் நடந்து முடிந்துள்ளது. நடப்பு மாதத்தின் இறுதியில் இந்த சுரங்கப் பாதையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிப்பார் என்று கூறப்படுகிறது.

Manali - Leh the world longest Atal tunnel will be opened by PM Modi

இமாசலப்பிரதேச மாநிலத்தில் மணாலி - லே இடையிலான 9 கிலோ மீட்டர் தொலைவிலான சுரங்கப்பாதை (நெடுஞ்சாலை)கடந்த பத்தாண்டுகளாக அமைக்கப்பட்டது. இதற்கு அடல் சுரங்கப்பாதை என்று பெயரிடப்பட்டுள்ளது. குதிரை ஷூ வடிவிலான இந்த இரட்டைபாதை கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது

tunnel

இந்த சுரங்கத்தின் மூலம் மணாலியில் இருந்து லே செல்லும் தூரத்தில் 46 கி.மீ., குறைவதுடன், 4 மணி நேர பயண நேரமும் இனி மிச்சமாகும். இந்த சுரங்கப்பாதையின் சிறப்புக்கள் என்னவென்று பார்ப்போம்:

  • 9 கி. மீட்டர் தொலைவில் ரூ. 3,500 செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • மணாலி - லே இடையில் ஏழு மணி நேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும்
  • நடப்பு செப்டம்பர் மாத இறுதியில் அடல் சுரங்கப் பாதையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இமாசலப் பிரதேச முதல்வர் ஜெய் ரான் தாகூரும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.
  • குளிர் காலத்தில் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக் பகுதிகளில் இருக்கும் சில பகுதிகளுக்கு செல்ல முடியாது. இனி அந்த சிக்கல் இருக்காது. இந்த சுரங்கப் பாதை போக்குவரத்து மூலம் இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக்கின் எந்தப் பகுதிகளுக்கும் செல்லலாம்.
  • இது சுற்றுலாப் பயணிகளை மட்டும் ஈர்க்காது. அந்தப் பகுதிகளில் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். மேலும், லஹால்-ஸ்பிட்டி ஆகிய இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கும்.
  • ஒவ்வொரு 150 கி. மீட்டருக்கும் தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 60 மீட்டருக்கும் தீயணைப்பு வசதி உள்ளது. ஒவ்வொரு 500 மீட்டருக்கும் எமர்ஜென்சி வெளியேற்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒரு 2.2 கி. மீட்டருக்கு காற்றின் தரம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 250 மீட்டருக்கும் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.
  • பயணிகளுக்கு பயண நேரத்தை மட்டுமின்றி, பயணச் செலவையும் சேமிக்கிறது.
  • 14,508 மெட்ரிக் டன் ஸ்டீல், 2,37,596 மெட்ரிக் டன் சிமெண்ட், 14 லட்சம் கியூபிக் மீட்டர் மணல் மற்றும் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆஸ்திரேலிய தொழில்நுட்பத்தில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
  • கடந்தாண்டு மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சுரங்கப் பாதைக்கு அடல் சுரங்கப்பாதை என்று மத்திய அரசு பெயர் வைத்துள்ளது.
  • * 2000 ஆம் ஆண்டில் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அந்த ஆண்டில், ஜூன் 3ஆம் தேதி இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+