மணிப்பூர் வன்முறை: குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுடன் "இந்தியா" கூட்டணி நாளை சந்திப்பு
டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3- ம் தேதி முதல் இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. தொடர்ந்து குக்கி - மைத்தேயி மக்கள் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன.

இது இன்னும் ஏற்கப்படாததால் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பதிலளித்து பேசும் விதமாக, மத்திய அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி விவாதம் நடைபெற உள்ளது. இதற்கிடையே, ‛‛இந்தியா'' என்ற பெயரில் உருவாகி உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் மணிப்பூரை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி 2 நாள் பயணமாக இன்று 21 பேர் கொண்ட குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு நிலவும் சூழலை நேரடியாக ஆய்வு செய்தது. இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்தியா கூட்டணி தலைவர்கள் நாளை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் மனு அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications