மணிப்பூரில் மீண்டும் பதற்றம்.. வன்முறையில் 21 பேர் காயம்.. பாதுகாப்பு படையினருடன் மோதல்!
இம்பால்: மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறை கும்பலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இதில் 21 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
மணிப்பூர் வன்முறையில் 160 பேருக்கு மேல் பலியாகி உள்ள நிலையில், பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் உயிரிழந்தவர்களில் குக்கி பிரிவை சேர்ந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதனால், பக்கத்து மாவட்டங்களில் பதற்றம் நிலவியது.

அண்டை மாவட்டமான பிஸ்ணுபூரின் காங்வை, பவுகாக்சாவோ பகுதிகளில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. இதில்தான் வன்முறை சம்பவங்கள் வெடித்து. ராணுவமும், மாநில போலீஸ் அதிரடிப்படையினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை விரட்டியடித்தனர். இதில் 21 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறையால் இம்பாலை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது.
மணிப்பூரில் நிலமை மோசமாக இருப்பதாகவும் கொந்தளிப்பாக இருப்பதாகவும் மாநில போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்ரக், ஹரதோதெல் மற்றும் சென்ஜன்சிரங் ஆகிய பகுதியில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயங்கள் அடைந்துள்ளார்.
சில இடங்களில் காவல் நிலையங்களை தாக்கிய கும்பல் ஆயுதங்களை பறித்து சென்றதாகவும் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை தொடர்ந்து இம்பால் மேற்கு, கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக குக்கி இனத்தவரின் 35 உடல்களை அடக்கம் செய்யும் நிகழ்ச்சிக்கு மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மணிப்பூரில் மீண்டும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது அங்குள்ள மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications