மணிப்பூர் வீடியோ விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை
டெல்லி: நாட்டையே உலுக்கிய மணிப்பூர் வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பிரேன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் 'மெய்தி' இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால், இதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக கடந்த மே 3-ந் தேதி, மணிப்பூரில் பழங்குடியின மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மெய்தி இன மக்களுக்கும் குக்கி இன மக்களுக்கும் இடையேயான வன்முறை வாரக்கணக்கில் நடைபெற்றது. இந்த வன்முறையை ஒடுக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. வன்முறை சற்று ஓய்ந்த நிலையில், கடந்த வாரத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியானது.
கடந்த மே மாதம் 4-ந் தேதி பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோவில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்து செல்லப்பட்டது பதிவாகியிருந்தது. ஒட்டு மொத்த தேசத்தையும் இது உலுக்கியது. நாட்டையே உறைய வைத்த இந்த கொடூர சம்பத்தில் ஈடுபட்ட நபர்கள் சுமார் 7 பேர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை விதிக்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கி வருகின்றன. மணிப்பூர் குறித்து விவாதம் நடத்த தயார் என்று மத்திய அரசு கூறியது. விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிப்பார் என்று கூறியதை எதிர்கட்சிகள் ஏற்கவில்லை.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகளின் ' இந்தியா' கூட்டணி முடிவு செய்தது. இதற்கான நோட்டீசை சபாநாயகரிடம் அளித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்போது விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்று பிறகு அறிவிப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில், மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிப்பூர் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றவும் மத்திய அரசு மனு தாக்கல் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications