நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்றாலும் பிரதமர் மோடி பேசணும்.. அவ்ளோதான்- சிபிஐ பினோய் விஸ்வம்
டெல்லி: லோக்சபாவில் மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது என்பது மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேசவைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே; இத்தீர்மானம் வெற்றி பெறுமா? தோற்குமா? என்பது எல்லாம் எங்களுக்கும் தெரியும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோஸ் விஸ்வம் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை. இதனை பிரதமர் மோடி ஏற்க மறுத்த நிலையில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது காங்கிரஸ்.

இத்தீர்மானம் தொடர்பாக சி.பி.ஐ. கட்சி எம்பி பினோஸ் விஸ்வம் கூறியதாவது: மத்திய பாஜக அரசுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு அரசியல் நடவடிக்கை. இத்தகைய அரசியல் நடவடிக்கைகள்தான் முடிவுகளைத் தரும். இப்படியான ஒரு நடவடிக்கைதான் பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வரவைத்து பேச செய்யும். எங்களுக்கு மணிப்பூர் தொடர்பான விவாதம் தேவை. தீர்மானத்துக்கு கிடைக்கும் வாக்குகளை மறந்து விடுங்கள், அவர்களுக்கும் ஆதரவு எப்படி என்பது தெரியும், எங்களுக்கும் ஆதரவு எப்படி என்பது தெரியும்.
காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இந்தியா கூட்டணி வலிமையாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது, மோடியின் ஆணவத்தை தகர்க்கவே நாங்கள் விரும்பினோம். பிரதமர் மோடி அகங்காரத்துடன் நடந்து கொள்கிறார். அவரை நாடாளுமன்றத்துக்கு வரவைப்பதற்கு எங்களிடம் இருக்கும் கடைசி ஆயுதம் இதுதான்.
உத்தவ் தாக்கரே சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கூறியதாவது: மணிப்பூர் வன்முறைகளுக்கான பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர். பிரதமர் ஏன் நாடாளுமன்றத்துக்கு வர மறுக்கிறார்? பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வராததை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு இந்த தீர்மானம் வரவழைக்கும்.
எதிர்க்கட்சிகளின் இந்த தீர்மானம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: பிரதமர் மோடி, மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர்களுக்கு நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications