குவைத் அரசு வானொலியில் 'இந்தி மொழியில் 30 நிமிட நிகழ்ச்சிகள்' பிரதமர் மோடி செம்ம மகிழ்ச்சி!
டெல்லி: குவைத் அரசு வானொலியில் இந்தி மொழியில் 30 நிமிடங்கள் வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்துவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். குவைத் அரசின் அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தமது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசியதாவது:
எனக்குப் பிரியமான நண்பர்களே, உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும். அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறாள். ஒவ்வொரு அன்னையும் தனது குழந்தைகளின் மீது அன்பைச் சொரிகிறாள். நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது. நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன் ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்? இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில். நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன். நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன். அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மக்கள் தங்கள் அன்னையோடு இணைந்தோ, அவர்களின் புகைப்படத்தின் முன்பாகவோ மரம் நடும் படங்களை சமூக வலைத்தளங்களில் தரவேற்றி வருகிறார்கள். அனைவரும் தங்கள் அன்னைக்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள் – அவர்கள் ஏழைகளாகட்டும் செல்வந்தர்களாகட்டும், வேலைக்குச் செல்லும் பெண்களாகட்டும் இல்லத்தரசிகளாகட்டும். இந்த இயக்கமானது தங்கள் அன்னையரின்பால் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தும் சமமான சந்தர்ப்பத்தை அனைவருக்கும் அளிக்கிறது.

குவைத் வானொலியில் இந்தி நிகழ்ச்சி: நாம் குவைத் பற்றிப் பேசுகிறோம், ஆனால் ஹிந்தி எங்கிருந்து வந்தது என்று தானே நீங்கள் சிந்திக்கிறீர்கள்? ஆனால் குவைத் அரசாங்கம் தனது தேசிய வானொலியில் ஒரு விசேஷமான நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறது. அதுவும் ஹிந்தி மொழியில். குவைத் வானொலியில், ஞாயிறுதோறும் இது அரை மணி நேரம் ஒலிபரப்பாகும். இதிலே பாரதக் கலாச்சாரத்தின் பல்வேறு வண்ணங்கள் இடம் பெறும். நமது திரைப்படங்கள் மற்றும் கலையுலகோடு தொடர்புடைய விவாதங்கள் ஆகியன அங்கே இருக்கும் பாரதநாட்டவர்களுக்கு இடையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. குவைத் நாட்டவர்களும் கூட இதிலே அதிக நாட்டம் காட்டுகிறார்களாம். இந்த அருமையான முன்னெடுப்பிற்காக, நான் குவைத் அரசுக்கும், அங்கிருக்கும் மக்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications