இமயமலைக்கு பெரிய நிலநடுக்கம் ஆபத்து? ஜப்பானுக்கு முன்பே நாம முந்திக்கணுமே? ஆனால் 1 தற்காலிக நிம்மதி
டெல்லி: ஜப்பானில் மிகப்பெரிய பூகம்பம் வரப்போகிறதாம்.. இதனால் இமயமலை பகுதியிலும் பேரழிவு ஏற்பட்டுவிடுமோ? பூகம்பம் ஏற்படுமோ? என்ற கலக்கம் கவ்வியுள்ளது.. இந்த ஆபத்தை கருத்தில் கொண்டுதான், நம்முடைய அரசு, இப்போது இமயமலை பகுதியை மிகவும் அபாயகரமான மண்டலம் VI-க்குள் சேர்த்துள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ரிங் ஆஃப் பயர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஜப்பான் என்றாலே நிலநடுக்கங்கள் அதிகமாக வரக்கூடிய நாடாகும்.. இதுபோலவே இமயமலையை சுற்றியுள்ள பகுதியும் உலகிலேயே ஆபத்தான நிலநடுக்க மண்டலமாக கருதப்படுகிறது.

பெரிய நிலநடுக்கம்
ஏனென்றால், இமாலய மலைகளின் அடியில் ஒரு மிகப்பெரிய பிளவு உள்ளது. இந்தியாவும் யூரேஷியாவும் என்கிற 2 பெரிய நிலத்தட்டுகள் எப்போதும் ஒன்றையொன்று அழுத்தி தள்ளிக் கொண்டே இருக்கின்றவாம்.. இதனால் இமயமலைக்கு கீழே வருடா வருடம் மிகப்பெரிய அழுத்தம் சேர்ந்து கொண்டே வருகிறது..
இந்த அழுத்தமானது ஒரே நேரத்தில் வெடித்து வெளியே விடக்கூடுமானால், ரிக்டர் அளவுகோலில் அது 8க்கும் மேல் இருக்கும்.. அதாவது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக கருதப்படும்.. அப்படி மட்டும் நடந்துவிட்டால்,வட இந்தியா, நேபாளம், அதன் அருகிலுள்ள பகுதிகள் என எல்லாமே மோசமாக பாதிக்கப்பட்டுவிடும்.
கடந்த காலங்களை சற்று பின்னோக்கி பார்த்தால், இதே பகுதிகளில் இதற்கு முன்பும் பெரிய பெரிய நிலநடுக்கங்கள் வந்து போயுள்ளன.. அதாவது 1934ல் பீகார், நேபாள நிலநடுக்கம், 2015 ல், நேபாள நிலநடுக்கம் போன்றவை ஏற்பட்டு, கடுமையான அழிவை தந்துவிட்டு போயிருக்கின்றன..
நிபுணர் சொல்வதென்ன
இப்போது நிலைமையே வேறு, அதாவது இமயமலை பகுதிக்கு அருகில் மக்கள் நிறைய பேர் வசித்து வருகிறார்கள்.. அங்கு பல இடங்களில் நிறைய கட்டிடங்கள் பலவீனமாக உள்ளன. இதனால் பெரிய நிலநடுக்கம் வந்தால், இந்த பகுதியெல்லாம் தாக்குப்பிடிக்குமா தெரியாது.. பயங்கரமான விளைவை நிச்சயம் தந்துவிடும்.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மைய இயக்குநர் டாக்டர் ஓம் பிரகாஷ் மிஸ்ரா சொல்லும்போது, "இமாலய பகுதியில் அடிக்கடி 2.5 முதல் 3.5 ரிக்டர்களில் சின்ன சின்ன நிலநடுக்கங்கள் வருகின்றன.. இந்த சிறிய அதிர்வுகள் பெரிய அளவில் சேரும் அழுத்தத்தை மெதுவாக வெளியேற்றுகின்றன.. இதனால் உடனடியாக பெரிய நிலநடுக்கம் வரும் அபாயம் இல்லை என்கிறார்..
சுருக்கமாக சொல்லப்போனால், சிறிய அதிர்வுகள் பெரிய ஆபத்தை குறைத்துவிடும் என்பதே ஓம் பிரகாஷ் மிஸ்ராவின் கருத்தாகும்..
தற்காலிக நிம்மதி இதுதான்
இது ஓரளவு நிம்மதியை அங்குள்ளவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறது என்றாலும், இந்த சின்ன அதிர்வுகள்கூட தற்காலிக நிம்மதிதான் என்கிறார்கள். ஏனென்றால் புவி இயக்கம் தொடர்ந்துகொண்டே இருப்பதால், பெரிய நிலநடுக்கம் வருவதை பிற்காலங்களில் தவிர்க்கவும் முடியாது..
எனவே இந்த அபாயத்தை உணர்ந்துதான், நம்முடைய அரசு, புதிதாக நிலநடுக்க ஆபத்து மண்டல வரைபடத்தை மாற்றியுள்ளது. அதாவது, இமாலயப் பகுதி முழுவதுமே முதல்முறையாக மிக அதிக ஆபத்து உள்ள "Zone VI" என்ற புதிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.. அந்தவகையில் இந்தியாவின் 61 சதவீதம் பகுதி இப்போது மிதமானது முதல் அதிக ஆபத்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலர்ட் முக்கியம்
இமய மலைப்பகுதி என்றாலே அமைதியானவை என்றாலும், ஆபத்து என்றால் அதன் அழிவு மிக மோசமாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.. இதற்குதான், தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தயார் நிலையில் மக்களை வைத்திருப்பது போன்ற விஷயங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்..
மொத்தத்தில், பெரிய நிலநடுக்கத்துக்கு ஜப்பான் தயாராகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இமயமலை பகுதிகளுக்கு எப்போது என்னாகுமோ? என்ற கிலிதான் அதிகரித்துள்ளது..
மக்கள் தொகை அடர்த்தி அதிகம், பலவீனமான உள்கட்டமைப்பு. நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இதெல்லாம் இருப்பதால் இமயமலை விஷயத்தில் நாம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதும் அவசியமாகிறது...!!












Click it and Unblock the Notifications