பொதுவாழ்விற்கு லாயக்கே இல்லாதவர் மாயாவதி... மோடி மீதான விமர்சனத்தால் ஜெட்லி ஆத்திரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மனைவி குறித்து விமர்சித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பொதுவாழ்விற்கு லாயக்கு இல்லாதவர் என நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார்.

முன்னதாக ,பிரதமர் மோடி , பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, ஆல்வார் கூட்டு பாலியல் வன்கொடுமைக்காக முதலை கண்ணீர் வடிப்பதாக தெரிவித்தார். மேலும் மாயாவதிக்கு இந்த விஷயத்தில் உண்மையில் கோபம் இருந்தால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

 Mayawati Unfit for public life: Arun Jaitley slammed BSP chief Mayawati after her remarks on PM Modi

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாயாவதி, சகோதரி உள்பட மற்றவர்களுக்கு மோடி எப்படி மரியாதை கொடுக்கிறார். தனது மனைவியையே அரசியல் ஆதாயத்திற்காக பிரிந்து சென்றவர் தான் பிரதமர் நரேந்திர மோடி" என கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண்ஜெட்லி இன்று வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், "மாயவதி பிரதமராக ஆசைப்படுகிறார். ஆனால் அவரது ஆளுமை, பேச்சுக்கள், நடவடிக்கைள் தரம் தாழ்த்திக் கொள்ளும் வகையில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிய தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியதன் மூலம் மயாவதி பொதுவாழ்விற்கு லாயக்கு இல்லாதவர் என்பது அம்பலமாகி உள்ளது" என்றார்.

இதனிடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் அருண் ஜெட்லி விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "மேற்கு வங்காளத்தில் ஜனநாயகம் விபத்தில் சிக்கிவிட்டது. எதிர்க்கட்சி தொண்டர்கள் கொல்லப்படுகின்றனர். வேட்பார்களர்கள் தாக்கப்படுகிறார்கள். வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்படுகின்றன" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+