• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்கள் முன்னேற்றம்.. இந்தியாவை பார்த்து கத்துக்கோங்க! புகழ்ந்து தள்ளும் பில் கேட்ஸ் முன்னாள் மனைவி!

Google Oneindia Tamil News

டெல்லி: பெண்களின் முன்னேற்றத்தில் முதலீடு செய்தால் எம்மாதிரியான ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும் என இந்தியா உணர்த்தியுள்ளதாக 'பில் மற்றும் மெலிண்டா ஃபிரெஞ்ச் கேட்ஸ்' அறக்கட்டளை துணைத் தலைவர் மெலிண்டா கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் முன்னேற்றத்தை பல நாடுகள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அதற்கேற்றார்போல் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது எனவும் பாஜக தலைவர்கள் பலர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்த மெலிண்டா இவ்வாறு கூறியிருக்கிறார்.

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு..உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க எதிர்ப்பு..உத்தரவை ரத்து செய்யக்கோரி ஹைகோர்ட்டில் வழக்கு

மத்திய அரசு

மத்திய அரசு

இது குறித்து மெலிண்டா பேட்டியளித்ததாவது, "உலகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதிலிருந்து பலரை மீட்க நிதியுதவி அவசியமானதாக இருந்தது. ஆனால் பல வளரும் நாடுகள் பல தங்கள் குடிமக்களுக்கான வங்கி கணக்கை உருவாக்குவதில் பின்தங்கி இருக்கின்றன. இதற்கிடையில் இந்திய அரசு இதனை சாதித்து காட்டியது. சுமார் 20 கோடி பெண்கள் உட்பட 30 கோடி மக்களுக்கு இந்திய அரசு வங்கி கணக்குகளை புதியதாக தொடங்கியது. இது கொரோனா காலகட்டங்களில் பெண்களுக்கு பெரிய அளவில் உதவி செய்தது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் குடும்ப தலைவிகளுக்கு பணத்தை டிஜிட்டல் முறையில் அனுப்பி வைத்தனர். டிஜிட்டல் பணப் பரிமாற்றம் நேரடியாக பெண்களின் கைகளுக்கு செல்வது என்பது, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை போன்றதாகும்.

பெண்களுக்கான அதிகாரம்

பெண்களுக்கான அதிகாரம்

இதன் மூலம் பாலின சமத்துவமின்மையை போக்க முடியும். மட்டுமல்லாது பெண்கள் அதிகாரத்தை பெரும் இடத்தில் இருப்பதை காட்டிலும் அதிகாரத்தை உருவாக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அதற்கு இதுதான் முதல்படி. பெண்களுக்கு சக்தி இருக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் அளிக்க தடையாக இருப்பதை பற்றி நாம் யோசிப்பதில்லை. அதிகாரம் அளித்தலுக்கும் முழு அதிகாரம் வழங்குவதற்கும் எப்போதும் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிகம் படித்திருக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் பெண்களின் இடைநிற்றல்தான் அதிகமாக இருக்கிறது. பள்ளி படிப்பிலிருந்தே பெண்களுக்கான தடைகள் தொடங்கி விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம். மாதவிடாய்தான்.

தடுப்பூசி

தடுப்பூசி

எனவே மாதவிடாய் சுகாதார மேலாண்மை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாப்கின்கள் கிடைக்காத பகுதியில் அவர்கள் வசித்து வந்தால் அவர்களுடைய கல்வி என்பது பாதியிலேயே தடைப்பட்டுவிடும். மாணவ/மாணவிகள் ஏழு நாட்கள் தொடர்ந்து படிப்பதை நிறுத்திவிட்டால் அல்லது பள்ளி செல்வதை நிறுத்தி விட்டால் மீண்டும் படிப்பது கடினமாகிவிடும். அவர்கள் பள்ளியை தொடர விரும்ப மாட்டார்கள். இந்த விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதாவது, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து அவர்கள் கல்வியை தொடர வழிவகுத்து வருகிறது. மறுபுறம் மக்களை தொற்று நோயிலிருந்து காப்பாற்றியுள்ளது. இந்தியாவில் 90% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது என்பது வியக்க வைக்கிறது.

அறிக்கை

அறிக்கை

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இதனை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. டிஜிட்டல் பணி பரிவர்த்தனை, சுகாதாரம், கல்வி என எல்லா தரப்பிலும் இந்தியாவை பார்த்து வளர்ந்து வரும் நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டியதுள்ளது" என்று கூறியுள்ளார். மேலும், தடுப்பூசி உற்பத்தி, உலகளாவிய பொது சுகாதாரத்துக்கான டிஜிட்டல் பொருட்களை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை குறித்து சுகாதாரத்துறை அமைச்சருடன் கலந்தாலோசனை செய்துள்ளதாகவும் இந்தியாவின் பல்வேறு முயற்சிகளையும், சாதனைகளையும் அவர் பாராட்டியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Melinda, Vice President of 'Bill and Melinda French Cats' Foundation, said that India has realized that investments in the advancement of women can lead to such creative changes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X