''கொஞ்சம் விவசாயிகளுக்கு ஆதரவா பேசுங்க பிரியங்கா சோப்ரா''... சொல்வது யாருனு பாருங்க!
டெல்லி: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் போராட்டம் குறித்து மவுனம் கலைக்கவேண்டும் என்று நடிகை மியா கலீபா தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், பிரபல பாப் பாடகி ரிஹானா ஆகியோர் ஏற்கனவே குரல் கொடுத்தனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியரசு தின அசம்பாவிதம்
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லியே பரபரப்பானது. டெல்லியின் பல்வேறு எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆதரவு குரல் வருகிறது.

கிரேட்டா தன்பெர் ஆதரவு
இதற்கிடையே பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ''இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரிஹானாவும் குரல் கொடுத்தார்
இதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை பகிர்ந்து "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல் நடிகை மியா கலீஃபாவும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இந்த நிலையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விவசாயிகள் போராட்டம் குறித்து மவுனம் கலைக்கவேண்டும் என்று நடிகை மியா கலீபா தெரிவித்தார்.

மியா கலீபா கேள்வி
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள மியா கலீபா அதில் கூறியிருப்பதாவது:-பிரியங்கா சோப்ரா எந்த நேரத்தில் பேசப் போகிறார்? எனக்கு ஆர்வமாக இருக்கிறது. பெய்ரூட் பேரழிவு அதிர்வுகளின் போது இருந்த ஷகிராவின் மவுனம் போல இது உள்ளது என்று கூறியுள்ளார்.