சின்னசாமி மைதானத்தில் 360 டிகிரி மேஜிக்? 5000 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்
பெங்களூரு: இந்தியாவின் மிக முக்கிய மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், இருக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்தப் போகிறார்களாம்.. ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இப்படியொரு புதிய திட்டம் கொண்டு வரப்போகிறார்கள்.. இதுகுறித்து கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
பெங்களூருவில் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும், ரசிகர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் மிகவும் வெளிப்படையான ஷேர் செய்து கொண்டார்.

பெங்களூரு சின்னசாமி மைதானம்
அப்போது, "பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியமானது பார்வையாளர்கள் முழுமையாக ரசித்து பார்க்கும் வகையில் அமையவில்லை, குறிப்பாக மைதானத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அதாவது 360 டிகிரி கோணத்தில் போட்டியை முழுமையாகக் காண்பதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
மைதானம் ஒட்டுமொத்தமாக 32 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட ஒரு பெரிய கட்டமைப்பாக இருந்தாலும், பாதுகாப்பு மற்றும் டெக்னிக்கல் காரணமாக டக் அவுட் பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக, ஒட்டுமொத்த இருக்கைகளில் வெறும் 22 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே தற்போதைய சூழலில் நிர்வாகத்தால் விநியோகிக்க முடிகிறது.
இந்த 22 ஆயிரம் டிக்கெட்டுகளிலும் வி.ஐ.பி மற்றும் பல்வேறு தரப்பினருக்கான இலவச பாஸ்களை கழித்துவிட்டுப் பார்த்தால், வெறும் 20 ஆயிரம் பேர் மட்டுமே தங்களின் பணத்தைச் செலுத்தி டிக்கெட் பெற்று நேரடியாக போட்டியைப் பார்க்கும் துரதிர்ஷ்டவசமான சூழல் நிலவுகிறது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
இந்த மிகப்பெரிய குறைபாட்டைக் களைந்து, போட்டியை நேரில் காண ஏங்கும் பல்லாயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு நற்செய்தி வழங்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை கர்நாடக கிரிக்கெட் சங்கம் கையில் எடுத்துள்ளது. அதன்படி, சின்னசாமி மைதானத்தில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை மேலும் 5 ஆயிரம் வரை அதிகரிப்பதற்குத் தீவிரமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டால் அதிகப்படியான ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்து தங்களுக்குப் பிடித்தமான வீரர்களை நேரில் கண்டு உற்சாகப்படுத்த முடியும். இருந்தாலும், இந்த மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு கர்நாடக மாநில அரசின் முழுமையான ஒத்துழைப்பும் மற்றும் உதவிகளும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்
எனது தலைமையிலான குழுவினர் நிர்வாகத்துக்கு வந்த பிறகு இங்கு போட்டிகளை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம். அவற்றின் கூட்டு முயற்சியாகவே சமீபத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சின்னசாமி மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளன. இந்த வருடத்தின் பிற்பாதியில் அடுத்தடுத்து அதிரடி சர்வதேச போட்டிகள் இந்த மைதானத்தில் அரங்கேற உள்ளன
அதிலும் வருகிற அக்டோபர் மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் விறுவிறுப்பான சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளும் இந்த சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் ஸ்டேடியத்தில் இருக்கைகள் அதிகரிப்பு
பெங்களூருவின் ஆனேக்கல் பகுதியில் புதிதாக நிறுவப்பட உள்ளதாகக் கூறப்படும் மற்றொரு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் குறித்த சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.
அந்த புதிய மைதானத்திற்கும் தங்களுடைய கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சின்னசாமி மைதானத்தின் இருக்கை அதிகரிப்பு உள்ளிட்ட இந்த ஒட்டுமொத்த வளர்ச்சி விஷயத்தில் மாநில அரசு தங்களை முழுமையாக அரவணைத்துச் செயல்படுமா என்பது தெரியவில்லை. அதனால் அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்" என்று வெங்கடேஷ் பிரசாத் திட்டவட்டமாக தெளிவுபடுத்தி உள்ளார்..
வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ள இந்த புதிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில், பெங்களூரு மைதானம் மேலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை வரவேற்கத் தயாராகிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!!!
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications