'மிக்சாங்' வரலாம்.. தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் 18 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் பக்கா ரெடி!
டெல்லி: வங்க கடலில் உருவாகி உள்ள மிக்சாங் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிஷா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 18 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்திருப்பதாவது: வங்கக்கடலில் உருவாகவிருக்கும் 'மிச்சாங்' புயலை எதிர்கொள்ள மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

மிக்சாங் புயல்: 'மிக்சாங்' புயல் தொடர்பான நிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தலைமை இயக்குநர், குழுவிடம் விளக்கினார். தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. .
நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே..: இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், டிசம்பர் 3-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும். மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5-ம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும்.
யார் யார் பங்கேற்பு?: தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், புதுச்சேரியின் நிதித் துறைச் செயலாளர் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவர்கள் மேலாண்மைக் குழுவிடம் விளக்கினர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போதுமான தங்குமிடங்கள், மருந்துகள் மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
18 குழுக்கள் தயார்: தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் செல்ல தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு அட்வைஸ்: மத்திய முகமைகள் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளின் தயார்நிலை நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சரவைச் செயலாளர், தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்கவும் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுமாறு அவர் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டார்.
மீனவர்கள்: கடலில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சரவை செயலாளர் உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர், புதுச்சேரி நிதித்துறை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், மீன்வளத்துறை செயலாளர், மின்துறை செயலாளர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications