Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயாநிதி மாறனுக்கு உரிமை இல்லை.. ஆவேசமான மத்திய அமைச்சர்.. ஆன்லைன் சூதாட்ட தடை குறித்து விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை நிறைவேற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். ஆன்லைன் விளையாட்டுக்கு தடைவிதிக்கும் தார்மீக கடமையிலிருந்து மத்திய அரசு விலகி செல்கிறதா? என்று தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலை இந்த பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்தில் ஏராளமானோர் உயிரை விடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்த விவகாரத்தில் மாநில அரசு இயற்றிய சட்டம் நடைமுறைக்கு வருவதில் சிக்கல் இருக்கிறது. ஏனெனில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டிருந்தது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14-ந் தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Dayanidhi Maran Online Gambling Ashwini Vaishnav

அந்த அறிவிப்பில் ஆன்லைன் விளையாட்டுக்களை விளையாட ஆதார் இணைப்பு கட்டாயமாக்கியதையும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட்டுக்கு யாரையும் அனுமதிக்கக்கூடாது என நேர கட்டுப்பாடு விதித்ததையும் எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருக்கின்றன,

இந்த வழக்குகள் சென்னை நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், கார் ரேஸ், வீடியோ கேம், கேண்டி க்ரஷ் உள்ளிட்ட பல ஆன்லைன் விளையாட்டுகள் உள்ள நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்தாமல் ரம்மியை மட்டும் ஒழுங்குபடுத்தி இருக்கிறார்கள். இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாட மற்ற எந்த மாநிலங்களிலும் தடை இல்லாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் செய்யும் உரிமையை பாதிக்கும் வகையில் இந்த விதி இருக்கிறது.

மத்திய அரசின் சட்டத்தின் கீழ் வரும் ரம்மி விளையாட்டை மாநில அரசு ஒழுங்குபடுத்த முடியாது. தமிழக அரசு, தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை கொண்டு வந்திருக்கிறது என்று வாதிட்டனர். அப்போது பேசிய நீதிபதிகள், 'மற்ற விளையாட்டுகளில் ஒருவர் வெற்றி பெற்று மற்றொருவர் தோல்வி அடைந்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் இங்கு தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் அடிமைப்படுத்தும் வகையில் இருப்பதில்லை. சில மட்டுமே அடிமைப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதுபோன்ற விளையாட்டுகளை மாநில அரசு கட்டுப்படுத்த நினைக்கிறது. இதில் என்ன தவறு உள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இருதரப்பு வாதமும் நிறைவடையாததால் விசாரணையை நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை மத்திய அரசு எப்போது முழுமையாகத் தடை செய்யும்? என லோக்சபாவில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதில் ஒன்றிய அமைச்சர் தார்மீகப் பொறுப்பிலிருந்து பின்வாங்குகிறாரா? ஆன்லைன் சூதாட்டங்களை தமிழ்நாடு அரசு தடை செய்திருக்கிறது. ஒன்றிய அரசு தடை செய்ய எவ்வளவு காலம் ஆகும். ஆன்லைன் சூதாட்டங்களை ஒன்றிய அரசு தடை செய்வதற்கு பதில், அதற்கு ஜிஎஸ்டியை அதிகரிப்பதிலேயே கவனம் செலுத்துகிறது என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்கையில், "மத்திய அரசின் தார்மீக உரிமை குறித்து கேள்வி எழுப்ப தயாநிதி மாறன் எம்பிக்கு உரிமை இல்லை. அரசியல் சாசனத்தில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தின்படியே நம்முடைய நாடு செயல்படுகிறது. ஆன்லைன் விளையாட்டு, பந்தயம் போன்றவற்றுக்கு தடை விதிப்பது மாநில அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களின் கீழ் வருகிறது. இவற்றுக்கு தடை விதிக்க மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம். புகார்கள் அடிப்படையில் 1,410 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இவற்றின் மீது பாரதிய நியாய் சன்கிதா சட்டத்தின் 112-வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+