டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. ஜேஎன்யூ நிர்வாகத்துடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன்று ஆலோசனை

மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்.. ஜேஎன்யூ நிர்வாகத்துடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன்று ஆலோசனை

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இன்று விசாரணை நடத்த உள்ளது.

    நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் மிக மோசமாக காயம் அடைந்தனர். சில மாணவர்கள் இதில் மிக மோசமாக தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

     சென்னையில் அதிகாலையிலேயே செம மழை.. சூப்பர் கூல் கிளைமேட்.. மக்கள் மகிழ்ச்சி! சென்னையில் அதிகாலையிலேயே செம மழை.. சூப்பர் கூல் கிளைமேட்.. மக்கள் மகிழ்ச்சி!

    என்ன தாக்குதல்

    என்ன தாக்குதல்

    இந்த தாக்குதலை நடத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இந்த மாணவர்கள் எல்லோரும் முகமூடி அணிந்து இருந்தனர். இந்த தாக்குதல் ஜேஎன்யூ நிர்வாகத்தை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    என்ன புரட்சி

    என்ன புரட்சி

    இதனால் நாட்டில் பெரிய புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இப்படி தாக்குதல் நடத்துகிறார்கள். இதை விட கூடாது என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். இணையம் முழுக்க இது பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது.

    தாக்குதல் அரசு

    தாக்குதல் அரசு

    இந்த தாக்குதல் காரணமாக மத்திய அரசுக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மத்திய பாஜக அரசுக்கு நெருக்கமான அமைப்புதான் ஏபிவிபி எனப்படும் மாணவர் அமைப்பு. அதனால் இந்த தாக்குதலை அடுத்து மத்திய அரசு கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது.

    டெல்லி எப்படி

    டெல்லி எப்படி

    இதனால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை இன்று விசாரணை நடத்த உள்ளது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் இன்று பல்கலைக்கழக நிர்வாகிகள் உடன் பேச உள்ளனர். இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Secretary, Ministry of Human Resource Development (MHRD) has called the Registrar, Proctor and Rector of Jawaharlal Nehru University (JNU) to his office, today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X