டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

30ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கும் விழா... முக ஸ்டாலினுக்கு அழைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: வரும் 30ஆம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆ.ராசா பங்கேறக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது. பாஜக மட்டுமே 303 இடங்களில் வென்று அறுதிபெருபான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

mk stalin invited to attend Modis swearing-in

இதையடுத்து கடந்த சனிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்த மோடி, அமைச்சர்வையை கலைக்க பரிந்துரைத்ததோடு, புதிய அமைச்சரவையை பதவியேற்க அழைப்பு விடுக்குமாறு முறைப்படி கோரிக்கை விடுத்தார்.

வேண்டுதலை நிறைவேற்று ஏழுமலையானே.. திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்ற முதல்வர் பழனிச்சாமி வேண்டுதலை நிறைவேற்று ஏழுமலையானே.. திருப்பதிக்கு குடும்பத்தோடு சென்ற முதல்வர் பழனிச்சாமி

இதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடியை பிரதமராக மீண்டும் பதவியேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். வரும் 30ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு பாஜக அழைப்புவிடுத்துள்ளது. இதைஏற்று இருவரும் பங்கேற்க உள்ளார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தற்போது மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேறகுமாறு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழாவில் திமுக சார்பில் எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேறக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

English summary
dmk leader mk stalin invited to attend Modi's swearing-in at may 30
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X