"மாநிலங்களுக்கு வேட்டு".. மோடி 3.0 வேறு மாதிரி இருக்க போகிறது.. பிரசாந்த் கிஷோர் பரபர கணிப்பு!
டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலையில் "மோடி 3.0ல்" பாஜக முக்கியமான பல மாற்றங்களை ஏற்படுத்த போவதாக அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், பிரஷாந்த் கிஷோர் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவே கணித்து உள்ளார். அதில், மோடி 3.0 அரசாங்கம் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்கும் போது அதிரடியாக பல விஷயங்களில் களமிறங்கத் தொடங்கும் என்று நினைக்கிறேன். அதிகாரம் மற்றும் வளங்கள் இரண்டிலும் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்.

மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் வகையில் மோடி அரசு கவனம் செலுத்தும். மாநிலங்களின் நிதி சுயாட்சியைக் குறைக்க மோடி முயற்சிகளை எடுப்பார். மாநிலங்களிடம் இருக்கும் நிதி சுயாட்சி மொத்தமாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த முறை ஆட்சிக்கு எதிரான அலை எல்லாம் இல்லை. பிரதமருக்கு எதிராக பரவலான கோபம் இல்லை. பாஜக 303 இடங்களை வெல்லும். மாநிலங்களுக்கு தற்போது பெட்ரோலியம், மதுபானம் மற்றும் நிலம் ஆகிய மூன்று முக்கிய வருவாய் ஆதாரங்கள் உள்ளன. பெட்ரோலியம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால் நான் ஆச்சரியப்படமாட்டேன். இதன் மூலம் மாநிலங்களின் பலம் குறையும், அவர்களின் பொருளாதார பலம் வெகுவாக மோடியால் குறைக்கப்படும்.
மோடி 3.0 வேறு மாதிரி இருக்கும். பல அதிரடி நடவடிக்கைகள் இதில் எடுக்கப்படலாம். சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் பெட்ரோலியத்தை வைப்பது மற்றும் மாநிலங்களின் நிதி சுதந்திரத்திற்கு முக்கிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியில் கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்று அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
பாஜக வெற்றிபெறும்: மேலும் அவர் கூறுகையில், பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும். மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 370 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தனித்து வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. அவர்கள் 370 இடங்களில் தனியாக வெல்ல வாய்ப்பே இல்லை.
அதற்கான சான்ஸ் பூஜ்ஜியம் ஆனாலும் அவர்கள் இந்த நம்பரை திரும்ப திரும்ப சொல்ல காரணம் இருக்கிறது. அது ஒரு இது உளவியல் விஷயம். இது எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியாகும். பாஜகவால் அந்த இலக்கை எடுக்க முடியாது. ஆனாலும் உளவியல் ரீதியாக எதிர்கட்சிகளை அடிக்க இப்படி செய்கின்றனர்,
கடந்த முறை வாங்கியதை விட கூடுதலாக 10-20 சீட் வாங்கினால் ஆச்சர்யம். ஆனால் மொத்தமாக 60-70 சீட் கூடுதலாக வாங்குவதற்கு சான்ஸே இல்லை.
370வது சட்டப்பிரிவின் பின்னணியில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் 370 என்ற எண்ணிக்கையை நரேந்திர மோடி குறிப்பிட்டார், 370வது சட்ட பிரிவை பாஜக நீக்கியது. இதனால் பாஜக தனியாக 370 இடங்களைப் பெறும் என்று மோடி நம்புகிறார். சில இடங்களில் என்டிஏ 400 ஐத் தாண்டும் என்றும் மோடி கூறினார். அவர் உரையாற்றிய பல பேரணிகளில் 370 இடங்கள் இலக்கு என்று போஸ்டர்கள் வைக்கப்படுகின்றன தேசிய அளவில் பாஜக தனியாக 370 எல்லாம் எடுக்க சான்ஸ் குறைவு. ஆனால் பாஜக கண்டிப்பாக மீண்டும் ஆட்சி அமைக்கும்., என்று அவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications