பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை விவாதம்
கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை விவாதம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரஷ்ய நாட்டின் சார்பாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றது.
பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்ளும். இதன்படி ஆகஸ்ட் மாதத்துக்கான பொறுப்பை இந்தியா கடந்த 1ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. இந்த ஒரு மாத காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் சிரிங்லா ஆகியோர் தலைமையில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்றைய தினம்(ஆகஸ்ட் 9) கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்குப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பல தலைவர்கள், உயர் நிலை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிராந்திய அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் வெளிப்படையான விவாதத்துக்கு தலைமை ஏற்கும் முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இந்நிகழ்ச்சி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது இந்த வெளிப்படையான விவாதம், கடல்சார் குற்றம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஆகியவற்றை தீவிரமாகத் தடுக்கும் வழிகள் மற்றும் கடல்சார் களத்தில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர். ரஷ்யா நாட்டின் சார்பாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்றார். கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது
கடல்சார் பாதுகாப்பு மற்றும் குற்றங்களின் பல அம்சங்கள் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனாலும், உயர்மட்ட அளவில் வெளிப்படையான விவாதமாக, கடல்சார் பாதுகாப்பு முழுமையான முறையில் விவாதிக்கப்படுவது, இதுவே முதல்முறையாகும்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications