டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு தெரியுமா ?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை இதற்காக செலவிட்டார் என்ற விவரம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

2014 ம் ஆண்டு பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் பூடான், நேபாளம், தென்கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, பிஜி, இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா, கனடா, வங்காள தேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 20க்கும் அதிகமான நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை எதிர்கட்சிகள் முதல் பொதுமக்கள் வரை அனைவருமே விமர்சித்து வருகின்றனர்.

Modis foreign trip cost details revealed

இதில் அவரது பயணங்கள் பெரும்பாலும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவே அமைந்தது என்ற விமர்சனமும் தொடர்ந்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த வகையில் இந்திய அரசு செலவு செய்தது எவ்வளவு என்பது குறித்து மும்பையை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அனில் கல்கலி என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டிருந்தார்.

காங். நிர்வாகிகளை அவமானப்படுத்தினாரா பிரியங்கா காந்தி... பரபரப்பு குற்றச்சாட்டு காங். நிர்வாகிகளை அவமானப்படுத்தினாரா பிரியங்கா காந்தி... பரபரப்பு குற்றச்சாட்டு

இதற்கு மத்திய அமைச்சரவை விவகாரத்துறையின் கணக்குப் பிரிவு மூத்த அதிகாரி சதீஷ் கோயல் என்பவர் பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோர் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டு முதல் 2018-19 ஆம் நிதியாண்டு வரையிலும் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேபினட் அமைச்சர்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக சேர்ந்து ரூ.311 கோடி செலவாகியுள்ளது. இணையமைச்சர்களின் சுற்றுப்பயணத்திற்கு ரூ.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2014-15ம் ஆண்டில்தான் வெளிநாட்டு பயணத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியும், அவரது கேபினட் அமைச்சர்களும் ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர்.

பிரதமரும் மத்திய அமைச்சர்களும் வெளிநாடு பயணங்களுக்காக மக்களின் வரிப்பணம் ரூ.263 கோடியையும், உள்நாட்டு பயணங்களுக்காக ரூ.48 கோடியையும் செலவிட்டுள்ளனர். இவர்கள் தவிர மத்திய இணையமைச்சர்கள் தங்களது வெளிநாடு பயணங்களுக்காக ரூ.29 கோடியையும், உள்நாட்டு பயணங்களுக்காக ரூ.53 கோடியுயையும் செலவு செய்துள்ளனர். அதோடு கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனியார் விமானங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணம், விமான பராமரிப்பு, தொலைபேசி கட்டணம் என இதற்காக செலவிடப்பட்ட தொகையின் விவரமும் தெரியவந்துள்ளது. இந்த விவரங்களின்படி மொத்தம் ரூ.2021 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த 2015 ம் ஆண்டு மோடியின் வெளிநாட்டு பயணச் செலவு குறித்து சமூக ஆர்வலர் லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுப்பெற்ற விவரங்களின் அடிப்படையில் ஓராண்டில் மட்டும் ரூ.37.22 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதோடு எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு செலவு என்பது குறித்தும் அதில் விவரங்கள் குறிப்பிடப் பட்டு இருந்தன. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது அதிகபட்சமாக ரூ.8.91 கோடியும், ஜெர்மனிக்கு சென்றபோதுரூ.2.92 கோடியும், , பிஜி நாட்டிற்கு சென்றபோது ரூ.2.59 கோடியும் சீனாவுக்கு சென்றபோது ரூ.2.34 கோடியும் செலவிடப்பட்டுள்ளது பூடானுக்கு சென்ற போது மிக குறைந்த அளவில் ரூ.41.33 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது,

அப்போது வெளியான இந்த விவரங்களில் பிரதமர் ஹோட்டல்களில் தங்கியிருந்த செலவு தொகையும் வெளியிடப்பட்டு இருந்தது அதன்படி ஆஸ்திரேலியாவில், மோடி ஹோட்டலில் தங்கி இருந்த போது செலவிடப்பட்ட தொகை ரூ.5.60 கோடி. மட்டுமல்லாது அவருடன் சென்றவர்களின் கார் பயணத்துக்கான வாடகையாக மட்டும் ரூ.2.40 கோடி செலுத்தப்பட்டுள்ளது. நியூயார்க் சென்றபோது பிரதமரின் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த நியூயார்க் பேலஸ் ஹோட்டல் வாடகை ரூ.9.16 லட்சம். பிரதமரின் ஓட்டல் அறை வாடகை ரூ.11.51 லட்சம செலவிடப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்பு படையினருக்கான கார் பயண வாடகை ரூ.39 லட்சம் அந்த சுற்றுப்பயணத்தின்போது தூர்தர்ஷன் குழுவினர் செய்தி சேகரிக்க ரூ.3 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. சீனாவுக்கு சென்றபோது ஹோட்டலில் தங்கி இருந்த செலவு ரூ.1.06 கோடி, வாகனங்களுக்கான வாடகை ரூ.60.88 லட்சம், விமான செலவு ரூ.5.90 லட்சம், அதிகாரிகளுக்கான தின பயண செலவு ரூ.9.80 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், வங்காளசேத்துக்கான பயண செலவு ரூ.1.35 கோடி. அதில் ஹோட்டலில் தங்கியதற்கான வாடகை ரூ.19.35 லட்சம். மொழி பெயர்ப்பாளர்களுக்கான செலவு ரூ.28.55 லட்சம், பிரதமரின் இன்டர்நெட் செலவு ரூ.13.83 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

English summary
PM Narendra Modi's foreign trip cost detaisl have been revealed by RTI info.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X