மத்திய அமைச்சர் பதவி.. ‘இலவு காத்த’ கிளியாய் ‘ரி ட்வீட்’ செய்யும் சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மே.வங்கம், தமிழகத்தில் காவி கொடியா?.. மத்திய அமைச்சர் பதவியா?- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் எப்படியும் இடம் பிடித்துவிடுவது என்பதில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி படுதீவிரமாக இருக்கிறார். இதற்காக தமக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என பதிவிடப்படும் ட்வீட்டுகளை தொடர்ந்து ரீ ட்வீட் செய்து கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

    பாஜகவில் ஐக்கியமானது முதலே மத்திய அமைச்சர் பதவிக்கு குறிவைத்தவர் சுப்பிரமணியன் சுவாமி. குறிப்பாக நிதி அமைச்சராக இருந்த அருண்ஜேட்லிக்கு கொடுத்த குடைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல.

    எப்படியாவது நிதி அமைச்சர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக மோடி அரசு மீதே பகீர் புகார்களை வாசித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. மோடி அரசின் ஒவ்வொரு பொருளாதார நடவடிக்கையையும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை தொடர்ச்சியாக போட்டு வந்தார் அவர்.

    மேலும் ரிசர்வ் வங்கி விவகாரம் உள்ளிட்டவற்றிலும் மோடி அரசுக்கு எதிராக நின்றவர் சுப்பிரமணியன் சுவாமி. இத்தனைக்கும் காரணம் மத்திய அமைச்சர் பதவி தமக்குக் கிடைக்கும் என்கிற நம்பிக்கைதான். ஆனால் அது 5 ஆண்டுகாலத்தில் நிறைவேறவில்லை.

    நிதின் கட்காரிக்கு ஆதரவு

    நிதின் கட்காரிக்கு ஆதரவு

    இதனால் வெறுத்துப்போனார் சுப்பிரமணியன் சுவாமி. லோக்சபா தேர்தல் நேரத்தின் போது தொங்கு நாடாளுமன்றம் அமையலாம் என கூறப்பட்டது. அப்போது 200 முதல் 220 இடங்களில் பாஜக வென்றால் நிதின் கட்காரிதான் பிரதமர் என பேட்டி கொடுத்து தமது கோபத்தை வெளிப்படுத்தினார் சுப்பிரமணியன் சுவாமி.

    மோடி-அமித்ஷா அமோகம்

    மோடி-அமித்ஷா அமோகம்

    அதேநேரத்தில் மோடியை கடுமையாக நேரிடையாக அவர் விமர்சிக்கவும் இல்லை. எதற்கும் துண்டு போட்டு வைப்போம் என்கிற அடிப்படையில் நிதின் கட்காரி பிரதமரானால் எப்படியும் அமைச்சர் பதவி வாங்கிவிடலாம் என கனவு கண்டார். ஆனால் மோடி- அமித்ஷா அணியே அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது.

    அமைச்சர் பதவி ஆசை

    அமைச்சர் பதவி ஆசை

    இதனைத் தொடர்ந்து முன்னரை விட அதிகாலையிலேயே ட்வீட்டுகளை போட தொடங்கிவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி. ராமர் கோவில், ராமர் பாலம் என எத்தனை சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருக்கிறதோ அத்தனை தொடர்பான வழக்குகளையும் கையில் எடுப்போம் என்றெல்லாம் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

    அமைச்சர்- ரீ ட்வீட்

    அமைச்சர்- ரீ ட்வீட்

    இந்நிலையில் இன்று மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் அமைச்சரவையும் பதவி ஏற்க இருக்கிறது. இதனால் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் படு பிசியாக இருக்கிறார். அதாவது தாமும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என விரும்பி போடப்படும் ட்வீட்டுகளை இடைவெளியே இல்லாமல் ரீ ட்வீட் செய்து கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

    இலவு காத்த கிளியாக சுவாமி q

    இலவு காத்த கிளியாக சுவாமி q

    அதுவும் இம்முறை அருண்ஜேட்லி தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கடிதம் எழுதியிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து மோடி சமாதானப்படுத்தியிருக்கிறார். இதனால் எப்படியாவது தமக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்காதா? என இலவு காத்த கிளியாக காத்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+