கொரோனா நோயாளிகளில் 63.25% குணமடைந்துள்ளனர்- பாதிப்பு எண்ணிக்கை 3,31,146: மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளில் 63.25% குணமடைந்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து 'ஒட்டு மொத்த அரசும்' செயல்படுவது என்ற உத்தியை மத்திய அரசு பின்பற்றுகிறது. கூட்டு முயற்சிகள், தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொற்று பாதிப்புகளைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நம் நாட்டில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 3,31,146 மட்டுமே. இது இதுவரை கண்டறியப்பட்ட மொத்த தொற்றுப் பாதிப்புகளில் மூன்றில் ஒரு பங்கு (34.18%) ஐ விட சற்று அதிகமாக உள்ளது.
நாள்தோறும் வீடு வீடாக சென்று தொற்று குறித்து கணக்கெடுப்பது உள்ளிட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் கொவிட்-19 பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் இவை உதவின.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் 3-வது வாரத்திலிருந்து குணமடைவோர் விகிதம் 50 விழுக்காட்டை கடந்துள்ளது. குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதோடு, தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கொவிட்-19 நோயாளிகளில் 63.25 சதவீதத்தினர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications