பாஜகவுக்கு அதிக நிதி.. அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் தாராளம்! வெளியானது விவரம்
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்ற வரும் நிலையில், மிகப்பெரும் பணக்காரர்களான அம்பானி, அதானியை ராகுல் காந்தி விமர்சிப்பதில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதானி குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் பாஜகவுக்கே அதிக அளவில் நிதி வழங்கியிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், நேற்று மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்திருக்கிறது.

அசாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா & நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் என 12 மாநிலங்களில் 94 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
நான்காம் கட்ட தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி கடுமையான விமர்சங்களை முன்வைத்திருக்கிறார். அதாவது "கடந்த காலங்களில் பெரும் பணக்காரர்கள் குறித்து விமர்சித்து வந்த காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) இப்போது அப்படி பேசுவதில்லை. அதிலும் குறிப்பாக அம்பானி மற்றும் அதானி குறித்து குற்றச்சாட்டுகளை அவர் கைவிட்டிருக்கிறார். தேர்தல் தொடங்கியதிலிருந்து இந்த இருவர்கள் மீதான விமர்சனங்களை அவர் வைப்பதில்லை.
ஏன் இந்த திடீர் மாற்றம்? இது குறித்து காங்கிரஸ் இளவரசரிடம் நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன். அம்பானி, அதானி குறித்து பேசாமல் இருக்க எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? காங்கிரஸ் கட்சி இவர்களிடமிருந்து தேர்தல் நிதியாக எத்தனை லாரிகளில் பணத்தை பெற்றது? இது சம்பந்தமாக நாட்டு மக்களுக்கு அக்கட்சி விளக்கமளிக்க வேண்டியிருக்கிறது" என பேசியிருந்தார்.
இப்படி இருக்கையில், தேர்தல் பத்திரம் மூலம் அதானிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் பாஜகவுக்கே அதிக அளவில் நிதி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதானி குழுமத்துடன் இணைக்கப்பட்ட மூன்று நிறுவனங்கள் ஏப்ரல் 2019 முதல் நவம்பர் 2023 வரை மொத்தம் ரூ.55.4 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. இதில் ரூ.42 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று நிறுவனங்களில் முதல் நிறுவனம் வெல்ஸ்பன் எண்டர்பிரைசஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் அதானியின் 65% பங்குகள் இருக்கின்றன. இந்நிறுவனத்திற்கு தலைமையாக கௌதம் அதானியும், நிர்வாக இயக்குநராக அவரது மகன் ராஜேஷ் அதானியும் இருக்கிறார்கள். இது ரூ.13 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருந்தது. இரண்டாவது நிறுவனம் வெல்ஸ்பன் கார்ப் லிமிடெட். இந்நிறுவனம் ரூ.27 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்தரங்களை பெற்றிருக்கிறது.
மூன்றாவது நிறுவனம் வெல்ஸ்பன் லிவிங் லிமிடெட். இந்நிறுவனம் மொத்தம் ரூ.15 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரத்தை வாங்கியது. இப்படியாக அதானியின் துணை நிறுவனங்கள் மூன்றும் சேர்ந்து ரூ.55 கொடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில் ரூ.42 கோடி பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாஜக மீது விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
-
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
விட்டமின் எம் வரலையே.. பதறும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்.. தமிழக தேர்தலில்.. பெரிய ட்விஸ்ட்! -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications