டாப் 4-ல் தமிழ் இல்லை? இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகள்.. 3வது இடத்தில் பெரிய "சர்ப்ரைஸ்"
டெல்லி: இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகள் என்று பார்த்தால் அதில் முதலிடத்தில் இந்தி தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பல மாநிலங்களில் பேசப்படும் இந்தி, இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை. அதேநேரம் இந்த லிஸ்டில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள மொழிகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 3வது இடத்தில் உள்ள மொழி பலருக்கும் வியப்பு தான்!
இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், 'மொழி' என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல, அது ஒரு கலாச்சார அடையாளம். இந்தியாவில் எந்த மொழி அதிகம் பேசப்படுகிறது என்றாலே நம் நினைவுக்கு வருவது இந்தி தான். ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்கள் பலருக்கும் ஆச்சரியமான சில தகவல்களைத் தந்துள்ளன.

இந்தி
முதல் இடத்தில் இந்தி தான் என்றாலும் அதன் பிறகு இருக்கும் மொழிகள் பலருக்கும் வியப்பு தான்..! குறிப்பாக, முதல் நான்கு இடங்களில் தமிழ் இல்லை என்பது ஒருபுறம் அதிர்ச்சி என்றால், மூன்றாவது இடத்தில் இருக்கும் அந்த மொழி பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
அதாவது இந்த லிஸ்டில் எதிர்பார்த்தபடியே சுமார் 52.83 கோடி பேர் பேசும் மொழியாக இந்தி முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து 9.73 கோடி பேர் பேசும் மொழியாக பெங்காலி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதில் மூன்றாவது இடத்தில் தான் சர்ப்ரைஸ்! சுமார் 8.3 கோடி பேர் பேசும் மொழியாக மராத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து 4வது இடத்தில் தெலுங்கும் (8.1 கோடி) 5வது இடத்தில் தமிழும் (6.9 கோடி) வருகிறது.
மராத்தி
மகாராஷ்டிராவில் அதிகம் பேசப்படும் மராத்தி இதில் 3வது இடத்தில் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தான். ஏனென்றால் மகாராஷ்டிரா என்றாலே பலரும் அது 'இந்தி' பேசும் மாநிலம் என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவின் அதிக மக்களால் பேசப்படும் மொழிகள் பட்டியலில் அங்கு பேசப்படும் மராத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான மராத்தி, அம்மாநில மக்களின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்திக்கும் மராத்திக்கும் இடையே எழுத்துருவில் ஒற்றுமைகள் இருந்தாலும், மராத்தி என்பது தனித்துவமான இலக்கிய வரலாற்றைக் கொண்ட ஒரு தனி மொழியாகும்! மராத்தி மொழியின் வளர்ச்சியும், அந்த மக்கள் தங்கள் தாய்மொழியின் மீது கொண்டுள்ள பற்றும் அதனை இந்தியாவின் டாப்-3 இடத்திற்கு உயர்த்திப் பிடித்துள்ளது.
டாப் 5 இடங்கள்
மத்திய அரசு கடந்த 2011ல் நடத்திய சென்சஸ் அடிப்படையில் இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் முதல் ஐந்து மொழிகள்:
இந்தி - எதிர்பார்த்தபடியே முதலிடத்தில் உள்ளது.
பெங்காலி - மேற்கு வங்கம் மற்றும் அதை ஒட்டிய உள்ள மாநிலங்களில் பேசப்படும் இந்த மொழி இரண்டாவது இடத்தில் உள்ளது.
மராத்தி - மகாராஷ்டிராவில் அதிகம் பேசப்படும் இந்த மொழி மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தெலுங்கு - ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பேசப்படும் தெலுங்கு நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்- ஐந்தாவது இடத்தில்தான் நம் தமிழ் மொழி உள்ளது.
வட மாநிலங்களில் இந்தி ஆதிக்கம் செலுத்தினாலும், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இன்னும் தங்கள் தனித்துவமான மொழியை எப்படிக் கட்டிக்காத்து வருகின்றன என்பதற்கு மராத்தி ஒரு சிறந்த உதாரணம். அங்கும் கூட இந்தி ஆதிக்கம் அதிகரித்தாலும் மராத்தி ஆர்வலர்களின் குரல்கள் அதிகரித்தே வருகிறது.!














Click it and Unblock the Notifications