Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிதடம்- ஆளில்லா விமானங்கள் சோதனை மையம்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிதடத்தில், ஆளில்லா விமானங்கள், மின்னணு ஆயுதங்கள் மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் தொடர்பான, மூன்று அதிநவீன பரிசோதனை கூடங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தை (Tamil Nadu Defence Industrial Corridor) மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக 2020-21 ஆம் ஆண்டில் தமிழக அரசால் 283.28 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தமிழகத்தின் முதன்மை முகமையான தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) ரூ. 4,800 கோடி மதிப்பில் அரசு மற்றும் பொது நிறுவனங்களுடன் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஏற்கனவே கையெழுத்திட்டிருக்கிறது.

tamilnadu delhi


இந்த நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில், ஆளில்லா விமானங்கள் (Unmanned Aerial System UAS), மின்னணு ஆயுதங்கள் Electronic Warfare EW) மற்றும் எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் (Electro Optics EO) பரிசோதனை கூடங்களை அமைக்க பாதுகாப்பு அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் (DTIS), டெல்லியில் இன்று பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) இடையே கையெழுத்தானது.

மத்திய/ மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, அதிநவீன பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான 400 கோடி ரூபாய் மதிப்பிலான DTIS திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மே 2020-ல் தொடங்கி வைத்தார். உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை ஊக்குவித்து, ராணுவ தளவாட இறக்குமதியை குறைத்து, தற்சார்பை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பாதுகாப்புத் தொழில் பெருவழித்தடத்தில் அமையும் பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்காக, தமிழ்நாட்டில் 4, உத்தரப்பிரதேசத்தில் 3 என மொத்தம் 7 பரிசோதனைக் கூடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 3 பரிசோதனைக் கூடங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

பாதுகாப்பு பரிசோதனை கட்டமைப்புத் திட்டம் மூலம், அரசு 75 சதவீத நிதியுதவியை வழங்கும். எஞ்சிய 25 சதவீதம், இதற்கென அமைக்கப்பட்ட இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் மத்திய- மாநில அரசுகளை உள்ளடக்கிய பிரத்தியேக அமைப்பால் வழங்கப்படும்.

ஆளில்லா விமான பரிசோதனை வசதியை கேரள அரசு நிறுவனமான கெல்ட்ரான், சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வழங்கும். மற்ற இரு பரிசோதனைக் கூடங்களுக்கான வசதியை பாரத மின்னணு நிறுவனம் மற்றும் இந்தியா ஆப்டெல் நிறுவனங்கள் வழங்கும்.

இத்திட்டம் நிறைவடையும் போது, பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கு ஊக்கமளிக்கும் விதமாக, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+