தமிழ்நாட்டில் தெரு தெருவா தண்ணிக்கு அலையறாங்களே.. பாஜகவுக்கு அக்கறை இருக்கா? கேரள எம்பியின் சுளீர்!
தமிழக தண்ணீர் பஞ்சம் குறித்து லோக்சபாவில் குரல் எழுப்பினார் எம்பி குஞ்ஞாலிக்குட்டி
டெல்லி: "தெருதெருவா தண்ணிக்கு தமிழ்நாட்டில அலைஞ்சிட்டு இருக்காங்க.. அதை பத்தியெல்லாம் நீங்க பேச மாட்டீங்களா?" என்று ஒரு எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். இப்படி லோக்சபாவில் கேள்வி எழுப்பியவர் நம்ம ஊர் எம்பி இல்லை என்பதுதான் ஹைலைட் மேட்டரே!
அவர்தான் குஞ்ஞாலிக்குட்டி.. ஆம்.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்தான், இப்படி கொதித்து போய் கேள்வி கேட்டவர்.

தமிழகம் மீது கேரளத்துக்கு எப்பவுமே ஒரு சாப்ட் கார்னர் இருக்கும். அதேபோல, கேரளத்தை அண்டை மாநிலமாக பாவிக்க முடியாத தன்மை நமக்கும் உண்டு.
இதில் எந்த மாநிலத்துக்கு ஒரு பிரச்சனை, பேரிடர் என்றாலும், பரஸ்பரம் உதவுவது நம் இரு மாநிலத்தின் அடிப்படை குணம். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இதனால் தண்ணீரை ரெயில் மூலம் அனுப்பி உதவுகிறோம் என்று பினராயி விஜயன்கூட சொல்லி இருந்தார்.
ஆனால், இந்த பிரச்சனையை லோக்சபாவில் எழுப்ப முடியுமா? அப்படியே எழுப்பினாலும் மாநிலம் சார்ந்த பிரச்சனையை எழுப்புவது அந்தந்த மாநில எம்பிக்களாகத்தானே இருக்க முடியும்? இதிலிருந்துதான் குஞ்ஞாலிக்குட்டி வேறுபடுகிறார்.
கேரள மாநிலத்திலேயே எத்தனையோ பிரச்சனைகள் சூழ்ந்து கிடக்க, தமிழகத்துக்காக குரல் கொடுத்து மத்திய அரசை திணறடித்துள்ளார் இவர். "தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா? தமிழ்நாட்டு மக்கள் தெருவெங்கும் குடங்களோடு அலையும் அவலம் நீடித்து வருகிறது. இதை பற்றி ஏன் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை?
இந்த அவையில் பேசிய பாஜக உறுப்பினர்களில் ஒருவர் கூட இதைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை? நீங்கள் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவில்லை. இப்போது தேர்தலுக்குப் பிறகு, மிகப்பெரிய பேச்சு முத்தலாக்காகத்தான் உள்ளது.
இருக்கிற பிரச்சனைகளை எல்லாம் விட்டுவிட்டு, இந்த விஷயத்தை முதலில் கையில் எடுப்பது வெட்கக்கேடு இல்லையா? அங்கே பீகாரில் குழந்தைகள் பன்றி காய்ச்சலால் இறந்து கொண்டிருக்கிறார்கள், அதை பற்றி ஏதாவது யாராவது இங்கே பேசினீர்களா? முக்கியமா, நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு கடுமையான பிரச்சினைகளிலும் மத்திய அரசு கவனம் செலுத்தவே இல்லை" என்று பொரிந்து தள்ளிவிட்டார் குஞ்ஞாலிக்குட்டி.
குஞ்ஞாலிக்குட்டியின் இந்த பேச்சை பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை. குஞ்ஞாலிக்குட்டியின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications