யார் நீ? எதுக்கு உள்ள வந்தே? சிக்கிய ஜீன்ஸ் ஆசாமியின் முடியை பிடித்து கும்மிய லோக்சபா எம்பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நுழைந்த மர்மநபர்களின் முடியை பிடித்து இழுத்து சரமாரியாக எம்பிக்கள் தாக்கினர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதலின போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு இன்று புதிய நாடாளுமன்றம் கூடியதும் மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது மக்களவை நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்தனர். இருவரில் ஒருவர் சபாநாயகர் நோக்கியும் மற்றொருவர் நாடாளுமன்ற வளாகத்தின் மேஜை மீது ஏறியும் களேபரம் செய்தனர்.
மேஜை மீது குதித்து ஓடியவரை எம்பிக்கள் சுற்றி வளைத்து எம்பிக்கள் சுற்றி வளைத்த போது ஜீன்ஸ் அணிந்து சென்ற நபர் தான் ஷூவில் மறைத்து வைத்திருந்த வண்ண புகைப் பட்டாசுகளை வீசினார். இதையடுத்து அத்துமீறிய இருவரையும் காவலர்கள் பிடித்து வெளியேற்றினர். அவர்களிடம் இருந்து வண்ணப் புகைப்பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர்.
Ruling & Opposition Party MP's Unitedly Bashed the Intruder.. 🔥😅#ParliamentAttack pic.twitter.com/8IlVETcqzz
— ᎠeeթtᎥ 🇮🇳 (@SaffronJivi) December 13, 2023
விசாரணையில் ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த 42 வயதான நீலம், மகாராஷ்டிரா லத்தூரில் வசிக்கும் 25 வயதான அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது. நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் கலர் பாம்கள் வீசியுள்ளனர். மேலும் சர்வாதிகாரம் கூடாது என முழக்கத்துடன் சபாநாயகரை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நாடாளுமன்றம் செல்லும் வழிகள் முடக்கப்பட்டன. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹாதான் அவர்களுக்கு பாஸ் கொடுத்ததாக அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பாஸ் மூலம் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு டெல்லி கமிஷனர் சஞ்சய் அரோரா வருகை தந்தார். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மக்களவை மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா இந்த பாதுகாப்பு அத்துமீறல் குறித்து கூறுகையில் இந்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படும். வெளியேறியது சாதாரண புகைதான். யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பார்வையாளர் மாடத்தில் குதித்த நபரை பிடிக்க வந்த எம்பிக்கள் முடியை பிடித்து தாக்குதல் நடத்தினார்கள். அவையில் கூடி அந்த நபருக்கு தர்ம அடி கொடுத்தனர். ஒரு எம்பி அவரது முடியை பிடித்து சுற்றி சுற்றி அடித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications