அசாமில் முஸ்லிம் திருமணம் + விவாகரத்து பதிவு சட்டம் ரத்து செய்யப்படும்.. மாநில பாஜக அரசு முடிவு
கவுகாத்தி: அசாமில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 - ஐ ரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக அம்மாநில பாஜக அரசு கூறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்மையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அதே மாதிரியான முடிவை அசாமும் எடுக்க உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் கொண்டு வரும் மசோதா அம்மாநில சடமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாட்டிலேயே பொது சிவில் சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாறியது. மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்தார்.

உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில் அசாம் பாஜக அரசும் தற்போது மேஜர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அசாமில் இஸ்லாமிய திருமண சட்டம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டத்தை ரத்து செய்ய மசோதா கொண்டு வர இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லா புருவா வெளியிட்டார். இந்த மசோதவை கொண்டு வருவதற்கான முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாகவும் கூறினார். அசாமில் தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வரும் 28 ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
அசாம் அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- இன்று மிக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அசாம் முஸ்லீம் திருமணம் & விவாகரத்து பதிவு சட்டம் 1935 ரத்து செய்யப்படும். இந்த சட்டத்தின் கீழ் எந்த முஸ்லீமும் திருமணமோ விவாகரத்தோ செய்ய முடியாது. இந்த விவகாரங்கள் அனைத்தும் திருமண சிறப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications