அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!
டெல்லி: இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத புதிய சாதனையை படைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சர், இந்திய பிரதமர் என அரசுப் பதவியில் தொடர்ந்து 8,931 நாட்களை பூர்த்தி செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசுத் தலைவர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார். இதற்கு முன்பு சிக்கிம் முதல்வராக பவன் குமார் சாம்லிங் 8,930 நாட்கள் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இருந்து பாஜகவுக்கு வந்த பிரதமர் மோடி தனது அரசியல் பயணத்தை குஜராத் மாநில முதல்வராக தொடங்கினார். 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற அவர், 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி வரை அந்தப் பதவியில் நீடித்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், மோடி நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
நரேந்திர மோடி
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களுக்குள் சுருங்கியது. இதன் மூலம், காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த முதல் நிகழ்வாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்ந்தது. இதன் மூலம் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் மோடி, தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகிக்கும் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
8931 நாள் சாதனை
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர் என்ற சிறப்பும் மோடிக்கு உள்ளது. மேலும், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களுக்கு அடுத்தபடியாக நீண்ட காலம் பதவி வகித்து வரும் பிரதமராகவும் மோடி திகழ்கிறார். தற்போது முதல்வர் மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளை இணைத்து மொத்தமாக 8,931 நாட்கள் பதவி வகித்ததன் மூலம், இதுவரை இருந்த சாதனையை மோடி முறியடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் நீண்ட காலம் அரசுத் தலைவராக இருந்தவர் என்ற வரலாற்றுப் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
அமித் ஷா வாழ்த்து
இந்த சாதனைக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட சமூக வலைதள பதிவில், நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆட்சி, நேர்மையான செயல்பாடு மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்வதில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு இந்த சாதனையில் பிரதிபலிக்கிறது என பாராட்டியுள்ளார். மேலும், ஏழை மக்களுக்கு அதிகாரமளித்தல், வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்துதல் போன்ற பல நடவடிக்கைகள் மூலம் மோடி தலைமையிலான ஆட்சி ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி சாதனை
இதற்கிடையில், சமூக வலைதளங்களிலும் பிரதமர் மோடி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சமீபத்தில் அவரது யூடியூப் சேனலை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனை கடந்துள்ளது. அதேபோல், இன்ஸ்டாகிராமில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை கடந்துள்ளது. இதன் மூலம் பதவியில் உள்ள உலக தலைவர்களில் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட தலைவராக மோடி திகழ்கிறார்.
இந்த எண்ணிக்கை டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பல உலக தலைவர்களின் சமூக வலைதள பின்தொடர்பாளர்களைவிட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதன் மூலம் உலகளவில் மோடியின் டிஜிட்டல் செல்வாக்கும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஜோசப் விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாக, கணவராக இருக்கணும்.. மீண்டும் தாக்கி பேசிய நயினார் -
முக்குலத்தோர் VS நாயக்கர்.. நயினார் நாகேந்திரனின் சாத்தூர் தொகுதியில் எந்த ஜாதி வாக்காளர்கள் அதிகம்? -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications