டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மார்ச் 8 முதல்.. எனது சமூக வலைதள பக்கங்களை... பெண்களே நிர்வகிக்கலாம்.. மோடி திடீர் அதிரடி!

Google Oneindia Tamil News

டெல்லி: பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதி எனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலிருந்து விலகவுள்ளதாக நேற்றைய ட்வீட்டின் அர்த்தம் தற்போது புரிய வருகிறது.

Recommended Video

    #SheInspiresUs: Pm modi announcement for women | எனது சமூக வலைதள பக்கங்களை... பெண்களே நிர்வகிக்கலாம் - மோடி

    பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நரேந்திர மோடி. இந்தியாவில் இவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.

    வாழ்த்து, இரங்கல், ஆலோசனை, அறிவுரை, வரவேற்பு என எதுவாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் மோடி கருத்து தெரிவிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்திருந்தார்.

    போஸ்ட்

    போஸ்ட்

    வாழ்த்து, இரங்கல், ஆலோசனை, அறிவுரை, வரவேற்பு என எதுவாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் மோடி கருத்து தெரிவிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் ஆகிய சமூக வலைதள கணக்குகளை விட்டுவிடலாம் என்று யோசிக்கிறேன். உங்கள் அனைவரையும் போஸ்ட் செய்ய வைப்பேன் என தெரிவித்திருந்தார்.

    சமூகவலைதளம்

    சமூகவலைதளம்

    பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு கொடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றொரு ட்வீட் போட்டுள்ளார். அதில் இந்த ஆண்டு பெண்கள் தினம் (மார்ச் 8) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனால் எனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்க அனுமதிக்கிறேன். தனது வாழ்க்கையாலும் பணிகளாலும் பிறருக்கு முன் மாதிரியாக திகழும் பெண்கள் வசம் சமூக வலைத்தள கணக்குகளை ஒப்படைக்க தயாராக உள்ளேன்.

    பயன்படுத்துதல்

    பயன்படுத்துதல்

    இது பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும். நீங்கள் பெண்ணா, அல்லது முன்மாதிரியாக திகழும் பெண்களை உங்களுக்கு தெரியுமா? அவ்வாறெனில் அவர்கள் பற்றிய தகவல்களை எங்களுடன் ஷேர் செய்யுங்கள் என கூறி #SheInspiresUs என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மேற்கண்ட ஹேஷ்டேக்கை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

    ட்வீட்

    உங்கள் அனுபவங்களை வீடியோவாக ஷூட் செய்து தனது யூடியூப்பில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் இந்த உலகிற்கு எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மோடி சமூகவலைதளங்களை விட்டு விலக போவதில்லை என்பது தெளிவாக விளங்குகிறது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலிருந்து விலகவுள்ளதாக நேற்றைய ட்வீட்டின் அர்த்தமும் தற்போது புரிய வருகிறது.

    English summary
    PM Narendra Modi says This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions. He breaks the suspense over the yesterday's tweet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X