"நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் ஆக வேண்டும்.." நிதிஷ்குமார் சொன்னதும்.. அதிர்ந்த பாஜக தலைவர்கள்!
டெல்லி: நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதை விருப்பம் என்று என்டிஏ கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் இப்போது ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இன்னும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு மட்டும் நடக்க உள்ளது.

நிதிஷ் குமார்: லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக வர விரும்புவதாகக் கூறியுள்ளார். தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணி 400 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிய நிதிஷ்குமார், அடுத்து திடீரென மோடி முதல்வராக வேண்டும் என்று கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியது.
அந்தக் கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், "நாங்கள் (என்டிஏ கூட்டணி) நாடு முழுக்க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.. மரியாதைக்குரிய நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும். அப்போதுதான் இந்தியா வளரும், பீகார் வளரும்.. மக்களுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
அதிர்ச்சி: மோடி முதல்வராக வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதைக் கேட்டு மேடையில் இருந்த மற்ற தலைவர்களால் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்ட நிதிஷ் குமார், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புவதாகவும் அதையே தான் கூற வந்ததாகவும் சொல்லிச் சமாளித்தார்..
அந்த கூட்டத்தில் மேலும் பேசிய நிதிஷ்குமார், "நரேந்திர மோடி ஏற்கனவே பிரதமராக இருக்கிறார். நாட்டை அவர் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.. இதுவே எங்கள் அனைவருக்கும் தேவை" என்றார்.
முதல்முறை இல்லை: அதேநேரம் நிதிஷ்குமார் இதுபோல உளறிக் கொட்டுவது இது முதல்முறை இல்லை. சமீப காலங்களில் அவர் இதுபோல மாற்றி மாற்றிப் பேசுவது அதிகரித்தே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சார கூட்டத்தில் ராம் விலாஸ் பாஸ்வானுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் வாக்கு சேகரித்தார். இதில் விஷயம் என்னவென்றால் ராம் விலாஸ் பாஸ்வான் 2020ஆம் ஆண்டிலேயே உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
குழப்பம்: அதேபோல கடந்த மாதம் பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசும் போது, "தேர்தலில் பிரதமர் மோடிக்காகவே பொதுமக்கள் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தலில் பாஜக நிச்சயம் 4000 தொகுதிகளில் வெல்லும்" என்றார். அதிலும் 4 லட்சம் எனச் சொல்ல வந்த முதலில் நிதிஷ்குமார், அதன் பிறகே சமாளித்தவாறே 4000 என்று கூறியிருக்கிறார்.. ஆனால், நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளே வெறும் 543 தொகுதிகள் தான்.
நமது நாட்டில் இதுவரை 486 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்துள்ள நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்த உடன் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications