டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுடன் யாரும் மோத முடியாது.. லடாக் எல்லையில் சீனாவுக்கு சரியான பதிலடி.. மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. லடாக் எல்லையில் சீனாவுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி மன்கீ பாத் நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவித்தார்.

Recommended Video

    எல்லையில் China -க்கு சரியான பதிலடி - Modi

    மன் கீ பாத் எனும் ரேடியோ நிகழ்ச்சியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மோடி உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறுகையில் இந்தியாவின் வலிமையை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் செயல்பாட்டை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. வரலாற்றில் எத்தனையோ சவால்களை நாம் எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளோம்.

    எத்தனை அவமானங்கள்! மாஜி பிரதமர் பி.வி. நரசிம்மராவ் நூற்றாண்டு விழா இன்று : கே.எஸ். ராதாகிருஷ்ணன் எத்தனை அவமானங்கள்! மாஜி பிரதமர் பி.வி. நரசிம்மராவ் நூற்றாண்டு விழா இன்று : கே.எஸ். ராதாகிருஷ்ணன்

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    நடப்பு 2020-ம் ஆண்டில் புயல் ஆம்பன், கொரோனா வைரஸ், லடாக் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சோதனைகள், சவால்களை எதிர்கொண்டிருக்கிறோம். இந்தியா சவால்களை எதிர்கொன்டு அவற்றில் இருந்து மீண்டு வந்துள்ளது. துயரங்கள் நிறையனவாக இருந்தபோதும் 2020-ம் ஆண்டு மிக மோசம் என்று நினைக்க கூடாது. நட்புறவை எப்படி பேணுவது என்பதை இந்தியா நன்கு அறியும்.

    வீரர்கள்

    வீரர்கள்

    தாய்நாட்டுக்கு துன்பத்தை தந்தால் அதை நாம் அனுமதித்து கொண்டிருக்க முடியாது. லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைதாழ்ந்து வீரவணக்கம் செலுத்துகிறோம். லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகம் என்றென்றும் போற்றப்படும்.

    நடவடிக்கை

    நடவடிக்கை


    மக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த ஒரு நடவடிக்கையும் வெற்றி பெற்றது இல்லை. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் அனைவரது ஒத்துழைப்பும் மிக அவசியம். தற்சார்பு பொருளாதார நடவடிக்கைக்கு நாடு முழுவதும் மக்கள் பேராதரவு தருகின்றனர்.
    நமது நாட்டுடன் யாரும் மோத முடியாது. நமது எல்லைகள் காக்கப்படும். லடாக் எல்லையில் சரியான பதிலடியை கொடுத்திருக்கிறோம்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    லாக்டவுன் காலத்தில் கொரோனாவை ஒழிக்க வேண்டும். பொருளாதாரத்தை வலிமைப்படுத்த வேண்டும். விண்வெளிதுறையில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி அளித்துள்ளதன் மூலம் புதிய உயரங்களை தொட முடியும். இந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் கடினமாக இருந்ததால் அடுத்த 6 மாதமும் அப்படியே இருக்கும் என கூறிவிட முடியாது.

    இஞ்சி

    இஞ்சி

    இந்தியாவின் இஞ்சி, மஞ்சள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உலக நாடுகள் ஆர்வமாக உள்ளன. உள்ளூர் பொருட்களை வாங்கி உற்பத்தியை ஊக்குவித்தால் இந்தியா மிகப் பெரிய வெற்றியடையும். தமிழகத்தில் பல்லாங்குழி போன்ற மாநிலங்களுக்கே உரிய பாரம்பரிய விளையாட்டுகளை நாம் ஊக்கப்படுத்த வேண்டும்.

    ராணுவ வீரர்கள்

    ராணுவ வீரர்கள்

    முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நீங்கள் இருந்தால் மற்றவர்களுக்கு துன்பத்தை தருகிறீர்கள். நாட்டின் பொதுமக்கள் அனைவரும் அஜாக்கிரதையாக ஒருபோதும் இருக்கக் கூடாது என வேண்டுகிறேன். ஊடங்கு முடிந்தாலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். லடாக்கில் வீரமரணம் அடைந்த குந்தன் குமாரின் தந்தை பேரன்களையும் ராணுவத்துக்கு அனுப்புவதாக கூறியுள்ளார். ராணுவ வீரர்களின் குடும்பங்களின் மகத்தான தியாகங்கள் போற்றுதலுக்குரியது என்றார் மோடி.

    English summary
    PM Narendra Modi to address the nation today at 11 am in Mann Ki Baat programme.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X