50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் பயணம்.. விண்ணில் பாய்ந்தது ‘ஓரியன்’ விண்கலம்
வாஷிங்டன்: 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. நான்கு விண்வெளி வீரர்களுடன் 'ஓரியன்' விண்கலம் விண்ணில் சீறிப்பாயந்தது. இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பூமியின் ஒரே துணைக்கோளாக நிலா உள்ளது. நிலவில் என்ன உள்ளது, அங்கு தண்ணீர் உள்ளதா? என பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆய்வுகளையும் மேற்கொண்டது. எனினும், பின்னர் இதனை கைவிட்டுவிட்டது. இந்த நிலையில் மீண்டும் நிலவு குறித்த ஆய்வுகள் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீண்டும் நிலவுக்கு சாட்டிலைட்களை அனுப்பி ஆய்வுகளை ஆரம்பித்துள்ளன. இந்தச் சூழலில் தான் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளை எடுத்தது. இதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன.
அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இன்றைய தினம் நாசா மீண்டும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கிய நிலையில் நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்ணில் சீறிப்பாயந்தது. இந்த ராக்கெட் இந்திய நேரப்படி இன்று காலை 3.54 மணிக்கு ஏவப்பட்டது.
இந்த விண்வெளி பயணத்தில் மூன்று அமெரிக்க மற்றும் கனடா நாட்டை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவரும் பயணித்துள்ளனர். அவர்களது பயணம் 10 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நாள் முழுவதும் பூமியின் சுற்றுப்பாதையை சுற்றிவந்த பிறகு, நிலவை நோக்கி செல்லும் வகையில் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் 'ஓரியன்' விண்கலம் நிலவை சுற்றி வந்த பின்னர் பூமிக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications