பூமியை தாக்கும் மிக பெரிய சூரிய புயல்.. நாசா கொடுத்த எச்சரிக்கை.. இந்தியாவை எந்தளவு பாதிக்கும்?
டெல்லி: சூரியனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரிய புயல் ஏற்பட்டது. இந்த சூரிய பூமியை நோக்கி வரும் நிலையில், இது நமது கிரகத்தைத் தாக்கினால் பல வகையான பாதிப்புகள் ஏற்படும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாம் வாழும் இந்த பால்வெளி மண்டலத்தில் பல மாற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் சூரியக் குடும்பத்தில் நடக்கும் மாற்றங்கள் நேரடியாக நமது பூமியைப் பாதிக்கும். இதனால் ஆய்வாளர்கள் சூரியக் குடும்பத்தில் நடக்கும் எல்லா விஷயங்களையும் கூர்ந்து கவனித்து, எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்கள்.

நாசா: அப்படி தான் இப்போது ஆய்வாளர்கள் சூரிய புயல் குறித்து எச்சரித்துள்ளனர். சூரியனில் இருந்து கிளம்பியுள்ள இந்த சூரிய புயல் விரைவில் இந்தியாவைத் தாக்கலாம் என்று அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் மின் சப்ளை தொடங்கிப் பல எலக்டிரானிங் சாதனங்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.
சூரிய புயல் என்பது சூரியனில் ஏற்படும் திடீர் வெடிப்புகள் ஆகும். இதை ஆங்கிலத்தில் solar storm என்கிறார்கள். இந்த சூரிய புயலின் போது அதிலிருந்து துகள்கள், ஆற்றல், காந்தப்புலங்கள் ஆகியவை மிகப் பெரியளவில் வெளியேறும். இது புயல் போல வந்து நமது பூமியைத் தாக்கும். அப்படித் தாக்கும் போது இது தொலைத்தொடர்பு பாதிக்கப்படும். சாட்டிலைட்கள் மொத்தமாக முடங்கும் அபாயம் உள்ளது.
"தாறுமாறாக பறக்கும் பறவைகள்.. சாட்டிலைட் கூட முடங்கும்.." பூமியை தாக்கிய சூரிய புயல்.. பரபர வார்னிங்
இந்தியாவுக்கு எச்சரிக்கை: இப்போது ஏற்படும் சூரிய புயல் பூமியை சில நாட்களில் தாக்கும் என்பதால் இதை இந்திய ஆய்வாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். இந்த சோலார் புயல் சாட்டிலைட்களை பாதிக்கும் என்பதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு செயற்கைக்கோள் ஆபரேட்டர்களுக்குத் இஸ்ரோ எச்சரித்துள்ளது.
சூரிய புயல் நம்மை நெருங்குவதால் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும். வல்லுநர்கள் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "சில நாட்களுக்கு முன்பு இந்த சூரிய புயல் ஏற்பட்டது. இது மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அவை இப்போது பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டு இருக்கிறது. இது நாம் காந்த மண்டலத்தில் குறுக்கீடுகளை ஏற்படுத்தலாம்.
தொழில்நுட்ப சாதனங்கள்: இருப்பினும், இது பூமியைத் தாக்க சில நாட்கள் வரை ஆகும் என்பதால் நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இது பூமியில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நாளை தெரிந்துவிடும். இதனால் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் உறுதியாக இது பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சொல்ல முடியாது" என்றார்.
எச்சரிக்கை: பொதுவாகச் சூரிய புயல் ஏற்படும் போது அது எந்த திசையில் வேண்டுமானாலும் செல்லும். ஒரு வேலை அது நமது கிரகத்தைத் தாக்கினால், பூமியின் காந்தப்புலம் பெரியளவில் பாதிக்கப்படும். இதை வல்லுநர்கள் புவி காந்த புயல் என்று குறிப்பிடுகிறார்கள். இதனால் தகவல் தொடர்பு முடங்கும். மின் தடைகள் ஏற்படும். இந்த சூரிய புயலால் மனிதர்களுக்கு நேரடியாக எந்தவொரு தீங்கும் ஏற்படாது. கிரகத்தின் காந்தப்புலம் மற்றும் வளிமண்டலம் இந்த புயல்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications