கொரோனாவை சரியாக கையாளவில்லை.. சரிந்தது பிரதமர் மோடி இமேஜ்- ஆர்.எஸ்.எஸ். மிக கடும் அதிருப்தி?
டெல்லி: கொரோனா 2-வது அலையை பிரதமர் நரேந்திர மோடி சரியாக கையாளவில்லை என பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரியவர் பிரதமர் நரேந்திர மோடி. அதனால்தான் 2-வது முறையாகவும் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்.
அந்த இயக்கத்தின் பெரும்பாலான கூட்டங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர் அமைப்பான அகில் பாரதிய பிரதிநிதி சபை கூட்டம் நடைபெற்றது.

அன்று பாராட்டிய ஆர்.எஸ்.எஸ்.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் வந்தே பாரத் மிஷன், சிறப்பு ரயில்கள் திட்டம் உள்ளிட்ட பலவற்றையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தையும் கூட ஆர்.எஸ்.எஸ். பாராட்டியிருந்தது.

சர்வதேச நாடுகளும் இந்தியாவும்
ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை இந்தியாவில் கோரத்தாண்டவமாடி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை என ஒவ்வொரு மாநிலமும் அல்லாடிக் கொண்டிருக்கிறது. சர்வதேச நாடுகளிடையே இந்தியா பரிதாபமான நிலையில் இருந்து வருகிறது.

இன்று ஆர்.எஸ்.எஸ். அதிருப்தி
இதனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிரதமர் மோடி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் பல தலைவர்களும் கூட இவ்வளவு நிலைமை மோசமாகிப் போயும் பிரதமர் மோடியால் சரி செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனராம்.

பாஜகவிலும் அப்டெச்
இத்தனைக்கும் அண்மையில்தான் பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்டவற்றில் பிரதமர் மோடியை பாராட்டி தீர்மானம் கூட நிறைவேற்றப்பட்டது. ஆனால் சட்டென வானிலை மாறியது போல.. பிரதமர் மோடி மீதான இமேஜை கொரோனா 2-வது அலை மிக மோசமாக சரித்து தள்ளிவிட்டது; இதில் இருந்து பிரதமர் மோடி மீள்வது கடினம் என புலம்புகின்றனர் பாஜக மூத்த தலைவர்கள்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications